குழம்பியவை...குழப்பியவை...கிறுக்கியவை...படித்தவை...படித்ததில் பிடித்தவை...!
Sunday, February 08, 2009
தொலைந்து போனவர்கள்
அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை
மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால்- உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.
கற்றேன் என்பாய் கற்றாயா?- வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்?- வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
குளித்தேன் என்பாய் யுகயுகமாய்- நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே- நீ
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய்- ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்
தின்றேன் என்பாய் அணுஅணுவாய்- உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம்- பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்
ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய்- உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய்- உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்
நான்’ என்பாய் அது நீயில்லை- வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
'ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?
அப்துல் ரகுமான் (தொகுப்பு - சுட்டுவிரல்)
Wednesday, December 03, 2008
காதல் முயற்சி!
காணாத கனவுகளை
மீட்கும் முயற்சியில்
என் காதல்!
***
எழுத்துக்களுக்கு வலிக்கும்
என்று நீ எனக்கு
எழுதாத கவிதைகளை
வாசிக்கும் முயற்சியில்
என் காதல்!
***
எனது பாதங்களுக்கு
சுமை வேண்டாம் என
நீ கொடுக்காத கொலுசுகளின்
சங்கீதத்தை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!
***
தேனீக்கள் மொய்க்கும்
என்று நீ பறிக்காமலே
என் குழலில் சூடிய
மலரின் வாசனையை
தேடும் முயற்சியில்
என் காதல்!
***
வீண் செலவு எதற்கு
என்று நீ சேமித்த காதல்
வார்த்தைகளை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!
***
இந்த முயற்சிகளோடு
ஒரு போதும் ஜனனிக்காத
உன் காதலை
தீவிரமாக காதலிக்கும்
முயற்சியில்
என் காதல்!
Wednesday, November 19, 2008
காதல் நிரபராதி...
அந்த கடைசி நாளொன்றில்
என் கண் மை கரைந்தது...நீ
உன் காதலை இடம் பெயர்த்த போது!
மனம் உடைந்தது,
நீ என் புன்னைகையை நிரந்தரமாய்
திருடி சென்றபோது!
வார்த்தைகளால்
எனக்காக நீ கட்டிய
தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்!
உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....
நீ இருட்டறையில் தள்ளிவிட்ட
என் இதயம் இன்னும்
துடிக்கிறது...
விடுதலை வேண்டி
கூண்டுக்குள் இருக்கும்
சாகாவரம் பெற்ற
நிரபராதி போல..
மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என...
Friday, September 19, 2008
ஏதோ நினைவிலே..
இளைப்பாறும் உன்
இனிய நினைவுகள்
என்ன நினைத்துக்கொண்டு
இருக்கின்றன?
சீக்கிரமே கிளம்பச்சொல்!
அவை வளர்த்துவிட்ட
கனவுகளை நான் எங்கு
சேமிப்பது...
நீதான் கனவுகளை காதால்
கூட கேட்க மறுக்கிறாயே..
பிறகெப்படி நனவாக்குவாய்?
அதனால் எல்லையற்று
குவியும் உன் நினைவு தரும்
கனவுகளுக்குள் என்னை நான்
தொலைக்கு முன்
உன் நினைவுகளை
தயவு செய்து
வெளியேற சொல்!
இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா..
மன்னித்துவிடு இனியும்
இரங்காதாம் என் இதயம்
..அட இன்னுமா போகவில்லை
...சீக்கிரம்..!!
Sunday, August 10, 2008
நினைவின் நேசம்
அடிக்கடி எட்டிப்
பார்க்கும்
மழையை போல
தலையை காட்டுகிறது
உனது ஞாபகங்கள்
*
உரம் போட்டு
வளர்ப்பது போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்
*
அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?
*
யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிர்றது
*
உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...
Monday, July 28, 2008
நட்பு காலம்
போகிற இடத்தில்
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற பயம்
நல்ல வேளை
நட்பிற்கு இல்லை
நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை
துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும் துளி
என்கிறது
நட்பு
தேர்வு முடித்த
கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம்
வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு
நட்பு முறிவுக்கான சம்மத
உடன்படிக்கை என்று..
--அறிவுமதி
Saturday, July 26, 2008
நிஜம்
ஏனோ எல்லாம் சலிக்கிறதடா
உன் வார்த்தைகள் எல்லாம் நினைவாக
என் கண்கள் முழுதும் கனவாக
கண்ணீர் மட்டும் நிஜமாக
காலை மாலை மதியம் எல்லாம்
ஒன்றாய் போக
இனிப்பு புளிப்பு கசப்பு அனைத்தும்
சுவையற்று போக
உன் நினைவுகள் அனைத்தும்
வெறும் ரணமாய் போக
என் வாழ்க்கை மொத்தத்தில் சலிக்கிறதடா ...
Friday, July 25, 2008
Saturday, July 12, 2008
நீயா நானா?
என் கண்களுக்குள் இதுவரைஉன் உருவம்
அடங்கா விட்டாலும்
உனது உதடுகள் வழி
எனது செவிகளுக்குள் ஊடுருவி
இதயத்தில் குடிகொண்ட
உன் வார்த்தைகளை
என்னுள் அடக்கினேன்..
உன் வார்த்தைகளால், நினைவுகளால்
உரம் போட்டு நட்டு வைத்த
அழகான ரோஜா செடி
நாட்கள் செல்ல செல்ல என்
இதயத்தை குத்தி கிழிக்கும்
முட்செடிகளாக மாறியது
உன் தவறில்லை..
செடியின் முட்களை அறியாது,
அதை என் இதயத்தில் நட்டது
என் தவறே!
நீ எல்லாரையும் தான் சிரிக்க
வைக்கிறாய்.. இருந்தாலும்
என்னை ஒருபடி அதிகமாகவே
சிரிக்க வைக்கிறாய் என பூரித்தேன்
ஆனால் அதிகம் சிரித்தால்
அழுவார்கள் என்பார்களே,
அதை புரிய வைக்கவா
இந்த விளையாட்டு?
உன்னை பொறுத்தவரை விளையாட்டு
என்ற சொல் தான் பொருந்தும்.
ஆமாம், நானெங்கே அழுதேன்?
கண்ணீர் என்பது ஆண்களால்
பெண்மைக்கு தரப்படும் சீதனம்..
நான் ஏற்கமாட்டேன் உன் சீதனத்தை!
நான் ஒன்றும்
முதுகெலும்பற்ற ஆணல்ல -கோழையாய்
ஆனால், கௌரவமாய் பிச்சை வாங்க!
இப்பொழுதெல்லாம் நானேஎன்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க...
உன் குரலை கேட்காமல் இருக்க...
இது ஒரு காலவரையறை அற்ற பிடிவாதம்...!
Monday, July 07, 2008
உவமைக்காதல்!
Saturday, July 05, 2008
விடியல்






