- நாய்க்கு நாலு கால் இருக்கலாம்...ஆனா அதால லோக்கல் கால்,எஸ் டி டி கால், ஐ எஸ் டி கால்...ஏன் மிஸ்டு கால் கூட பண்ண முடியாது
- கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்...காவேரி ஆத்துல மீன் புடிக்கலாம்...ஆனா, ஐயர் ஆத்துல மீன் புடிக்க முடியுமோ?
- திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்.
- என்னதான் உன் தலை சுற்றினாலும் உன் முதுகை நீ பார்க்க முடியுமா?
- மீன் புடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்...நாய் புடிக்கிறவனை நாயவன்னு சொல்ல முடியுமா?
- என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது!
- தேள் கொட்டினா வலிக்கும்...பாம்பு கொட்டினா வலிக்கும்....முடி கொட்டினா வலிக்குமா?
- ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்....காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.... பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமோ?
- பொங்கலுக்கு கவன்மெண்ட் லீவு குடுப்பாங்க....ஆனா, இட்லி தோசைக்கு குடுப்பாங்களோ!
- கோலமாவில் கோலம் போடலாம்...கடலை மாவில் கடலை போட முடியுமா?
- லைப்ல ஒண்ணுமே இல்லன்னா போர் அடிக்கும்...தலையிலே ஒன்னும் இல்லைன்னா கிளார் அடிக்கும்....
- ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும்,... பாஸ்ட்புட் கடைல நின்னுக்கிட்டுதான் சாபிடனும்...
குழம்பியவை...குழப்பியவை...கிறுக்கியவை...படித்தவை...படித்ததில் பிடித்தவை...!
Monday, November 17, 2008
தமிழ் தத்துவங்கள்
Monday, August 18, 2008
பக்கா கணிணிப் பொறியாளர் Vs பக்கா குடும்ப விளக்கு
கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர்
மனைவி: பக்கா குடும்ப விளக்கு
கணவன்: அன்பே, வந்துட்டேன்
மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?
கணவன்: BAD COMMAND OR FILE NAME.
மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?
கணவன்: ABORT,RETRY,IGNORE.
மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?
கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.
மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.
கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.
மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.
கணவன்: DATA TYPE MISMATCH.
மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.
கணவன்: BY DEFAULT.
மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: HARD DISK FULL.
மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?
கணவன்: UNKNOWN VIRUS DETECTED.
மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?
கணவன்: TOO MANY PARAMETERS.
மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.
கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.
மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!
கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.
மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.
கணவன்: SHUT DOWN THE COMPUTER.
மனைவி: நான் போறேன்.
கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR கம்ப்யூட்டர்
:))
Wednesday, July 23, 2008
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்...
எனக்கு ஈ-மெயில்இல் வந்த ஒரு நகைச்சுவை! இங்கு பகிரலாம் என்று நினைத்தேன்...நீங்களும் சிரியுங்க :)
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்...
பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு