
குறுகிய காலத்தில் அறிமுகமாயிருந்தாலும் என்னை நினைவு கூர்ந்து, விருது வழங்கிய இரவீ க்கு எனது நன்றிகள் :) நான் வலைப்பூவில் இணைந்து சில மாதங்கள் என்பதாலும், நேரம் இடம் கொடுக்காத காரணத்தால் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவுகள் எழுதுவதாலும், இந்த வலைப்பூ வட்டத்தில் இருக்கும் ஏனைய நண்பர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத முடியவில்லை.
உங்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான நன்றிகள்.
இந்த Butterfly Award யாருக்கு கொடுப்பது என்று யோசித்தேன், அனேகமாக இங்கு குறிப்பிட்டவர்கள் விருது பெற்றவர்கள் ;). இன்னும் விருது பெறாமல் இருக்கும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்துள்ளேன்.....நீங்கள் ஏற்கனவே கொடுக்கப்படவராக இருந்தால் மன்னிக்கவும் :) இதையும் ஏற்று கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
- ஒரு பதிவு கூட விடாமல் தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிடும் இனிய தோழி குமித்தா வுக்கும்
- அதே போல் சளைக்காமல், நான் பதிவு பக்கமே வராமல் இருந்தாலும் விருது, தொடர் விளையாட்டுகளில் என்னை மறக்காமல் மாட்டிவிடும் சரவணகுமார் க்கும்
- என் வலைப்பக்கம் தலை காட்டாமல் இருந்தாலும், சிறந்த இடுகைகளை எழுதும் சகாராவின் புன்னைகை க்கும்
இந்த Butterfly விருதை வழங்குகிறேன். இதற்கு காரணமாக இருந்த இரவீக்கும் எனது நன்றிகள் :)