Friday, May 30, 2014

To keep or not..

How many of you are still following my blog? Obviously I haven't posted much since a while ago. Thinking of deleting this altogether as I am not active on here. If there is even one follower I will keep it.

Wednesday, February 29, 2012

முதல் முறையாக..

10 வருடங்களுக்கு பிறகு நட்பில் ஒரு விரிசல்...
கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை.
இப்படி உங்களில் யாருக்கேனும் நடந்ததுண்டா?  எங்கள் மூவரின் நட்பை பார்த்து வியக்காத ஆட்களே இல்லை. அந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காத நண்பிகள். இப்போது, ஒரே ஒரு நாளில் எல்லாம் உடைந்து விட்டது. வருடங்கள் செல்ல செல்ல, கடமைகள் கூடியது, நேரம் குறைந்தது. எப்போதாவது சந்திப்பது தான்...ஆனால் நட்பு தொடர்ந்தது. பல பேர் கண்ணூறு படுத்தி விட்டார்கள் என்று நினைக்கிறேன். தினமும் ஸ்கூலில் சந்திக்கும் போது கூட வராத சண்டை இப்போது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட நாங்கள் இன்னொருவரை காயப்படுத்தும் படி பேசியதில்லை. ...... இது வெறும் பாடமாக மட்டும் அமைந்துவிடவேன்றும் என்று ஆசைப்படுகிறேன்.


Wednesday, February 22, 2012

B A C K :)

So I am back to blogging again. Almost a year later. I am glad I didn't remove my blog which I was going to do at several occasions. I hope you all remember me :)

Will be back with a post soon...:)

மீண்டும் வலைப்பதிவுக்கு வந்துட்டேன்....சந்தோஷமாக இருக்கிறது. திடீரென்று தோன்றியது தொடரலாம் என்று. பல சந்தர்ப்பங்களில் இந்த பக்கத்தை நிரந்தரமாக அழித்துவிடலாம் என யோசித்திருக்கிறேன்...ஆனால் அப்படி செய்ய வில்லை :) விரைவில் ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கும் வரை..... விடை பெறுகிறேன். :)

Sunday, December 19, 2010

Dearest friends!!

I am here after a very long while, which is almost for a year I guess. I have missed all the dear blogger friends, and your blogs. I haven't read for a long time too.
I hope everyone is doing well and haven't forgotten me, those who knew me at the times I used to write. I thought I say a bigggg HELLO to you all and wish you all a very happy days and keep blogging :)
Take care!!

Tuesday, January 26, 2010

Happy New Year

Wishing everyone a very happy new year. Hope this year is treating you all well! Think good, Do good, Be good :)
Take care! :)

Tuesday, August 11, 2009

புரிதல் என்பது

உலகத்தில் பல விடயங்களை எம்மால் முழுதாக புரிந்து கொள்ளவோ விளங்கிக்கொள்ளவோ தெரியவில்லை/முடியவில்லை. அந்த சக்தி யாரிடமும் இல்லை என்பதே உண்மை. கற்றல் கூட எம்மால் நினைக்கும் அளவுக்கு முடியாது. ஒருவன் இறக்கும் போது கூட "கற்றது கைம்மண்ணளவு" என்பது உண்மையாகத்தான் இருக்கும். ஒருவரால் கூடிய அளவு 5-10% தான் அவரது மூளையை பயன்படுத்துகின்றார்களாம். இது ஒன்றும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த பட்டதோ என்றெல்லாம் எனக்கு தெரியாது.

அப்படி இருக்கும் போது, இன்னொருவரை எம்மால் எந்த காலத்திலும் முழுதாக புரிந்து கொள்ளவே முடியாது. ஏன் எங்களை எங்களாலே புரிந்து கொள்வது என்பது சிலசமயங்களில் முடியவில்லை. நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யோசிக்க வைக்கும் தருணங்கள் எல்லோர் வாழ்விலும் நிச்சயம் இருந்திருக்கும். ஒரு மனிதனை சந்தோஷமான நிமிடத்தை விட கோபமான நிமிடம்தான் தடுமாற வைக்கிறது.
கோபம் என்பது என்ன? எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தால் வருவதா?
பல சமயங்களில் எனக்கு கோபம் வருகிறது என்று தெரிந்தால், அமைதியையே பதிலாக கொடுப்பேன். கோபம் தணியும் வரை பேச்சு வார்த்தை குறைவாகவே அல்லது அறவே இல்லாமல்தான் இருக்கும். ஆனால் அதே நேரம் என்னில் இருக்கும் weakness என்ன என்றால், கோபம் சட்டென்று தணிந்துவிடும். சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் செல்ல நானே எல்லாவற்றையும் மறந்து பழையபடி மாறிவிடுவேன். மன்னிப்பு என்னிடம் தாராளமாகவே கிடைக்கும். அப்போதெல்லாம் நினைத்து கொள்வேன் என்னை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாமையே இவர்கள் இப்படி நடக்க காரணமாக இருக்கிறது. சரி பரவாயில்லை, ஐந்து விரல்களும் ஒரே மாதிரியா என்ன.
அதற்காக நான் ஒரு நாளும் அனாவசியமாக கோபப்பட்டது இல்லை என்றில்லை. எனக்கும் அர்த்தமற்ற கோபங்கள் வருவதுண்டு ஆனால் மிக குறைவு. அம்மாவிடம் சில சமயம் கோபம் வரும் ஆனால் சில நிமிடப்பொழுதில் அது இல்லாமல் போய்விடும். எனது அடுத்த சொற்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மன்னிப்பு கேட்பதாகவே இருக்கும்..
ஆனால் அதே சமயம் எனது நண்பி ஒருத்தியுடன் இரண்டு வருடங்கள் பேசாமல் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் இருந்திருக்கிறேன். இன்னொருத்தியுடன் ஒரு வருடம் பேசாமல் இருந்திருக்கிறேன். இதெல்லாம் நான் ஆறாம் ஏழாம் கிரேட் படிக்கும்போதே.


கோபம் என்பது நம்மை ஆட்கொள்ள முதலே நாம் கோபத்தை ஆள தெரிந்திருந்தால் நல்லது. கோபம் எப்போது உருவாகிறது -எமக்கு பிடிக்காத ஒன்றை இன்னொருவர் செய்யும் போது அல்லது எமக்கு பிரியமான ஒன்று இல்லாமல் போகும் போது தானே.
இதற்கெல்லாம் காரணம் எந்த அளவு ஒருவரின் எதிர்பார்ப்புக்கள் உள்ளது என்பதே. அதேவேளை ஒரு மனிதன் எதிர் பார்ப்புக்கள் இல்லாமல் வாழவும் முடியாது. இந்த எதிர்பார்ப்புக்களே சின்ன சின்ன சந்தோஷங்களை தருபவை. ஏன், எதிர்பார்ப்புக்களே வாழ்க்கையின் அடிப்படையாக அமைகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு என்பது போல, எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. உங்களால் முடிந்தளவு இந்த எதிர்பார்ப்புக்களை மற்றவர்களிடம் இருந்து குறைத்தால், ஏமாற்றங்கள் குறையும். ஏமாற்றங்கள் குறைந்தால் கோபம் குறையும்.
முயன்ற வரைக்கும் மற்றவரின் இடத்திலிருந்து ஒரு விடயத்தை அறிவது சிறந்தது.. Empathy, as they say. ஒரு நோயாளியை பார்க்கும் போது, எந்த அளவு அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவர் இடத்தில் இருந்து யோசித்தால் தான், அவரின் வேதனையை புரிந்துகொள்ள முடியும். இதே போலதான், கோபம் எம்மை ஆக்கிரமிக்கும் போது எமது கோபம் நியாயமானதா என்று ஒரு கணம் யோசிப்பது அவசியம்.

அதே போல, அடுத்தவர்கள் எம்மில் கோபப்படுகிறார்கள் என்றால் உண்மையில் அவர்கள் கோபத்தில் ஞாயம் உண்டா, கோபப்பட வைத்த நாம்தான் காரணமா, இல்லை அவர்களுக்கு விளங்கும் படி அமைதியாக எடுத்து சொல்வதுதான் சரியா என்று யோசிக்க வேண்டும். அப்படி உங்கள் கோபத்தை ஒருபுறம் வைத்துவிட்டு சிந்தனை செய்தீர்களேயானால், பேச்சு முடிவு இரண்டும் தெளிவாகும். என்று அடியேன் நினைக்கிறேன்.
இதையெல்லாம் நானும் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன் :)
இந்த பதிவுக்கு குறிப்பிட்ட நோக்கம் எல்லாம் கிடையாது. இந்த சிறியவளின் எண்ணப்பகிர்வு மட்டுமே!

Friday, February 13, 2009

காதலர் தினம் என்றால்...

காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? நான் உன் மீது என்றும் மாறாத காதல் வைத்திருக்கிறேன் என்று ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்துவதற்கா? இல்லை, காதல் என்ற ஒன்றுதான் நம் இருவரையும் இணைக்கிறது என்று கொண்டாடவா? முதலில், காதலர் தினம் காதலர்களால் மட்டுமே கொண்டாடப்படவேண்டிய ஒன்றா?

என்னை பொறுத்தவரை, காதலர் தினம் என்பது, காதலில் நீந்திக்கொண்டிருப்பவர்களை விட, காதலில் நீந்தி கரையேறியவர்கள் அதாவது காதலித்து திருமணம் செய்தவர்கள் காதலிக்கும் போது எப்படி அன்பாக இருந்தார்களோ அதே போல இருவரும் திருமணத்தின் பிற்பாடு வருகின்ற காதலர் தினங்களிலும் அந்த காதல் குறையாமல் அதே போல அன்பாக இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு காதலில் வெற்றி கண்டவர்கள் அதை கொண்டாட வேண்டும். இது காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு மட்டும் என்றில்லை, காதலிக்காமல் கல்யாணம் செய்து அதன் பின் காதலிக்க தொடங்கியவர்களுக்கும் பொருந்தும்.

காதலிக்கும் போது நிறைய விட்டு கொடுப்பீர்கள், சின்ன சின்ன சண்டைகள் இனிக்கும், காதலிக்கும் போது இன்னொருவரிடம் உள்ள நெகடிவ் விஷயங்கள் கண்ணுக்கு தெரியாது தெரிந்தாலும் அது ஒரு மட்டேராகவே இருக்காது...ஆனால் கல்யாணத்திற்கு பின், இவை எல்லாம் தலை கீழாக மாறி; பொசிடிவ் விஷயங்கள் கண்ணில் தெரியாமல் மற்றவரின் நெகடிவ்ஸ் மட்டுமே உங்கள் கண்ணை உறுத்தும், முன்னர் சிறிதும் சலிக்காத நீண்ட உரையாடல்கள் பின்னர் சலிக்கும் ...ஏன் கல்யாணத்தின் பின்னர் இன்னொருவருடைய அழகை புகழகூட மனம் வராது, ஒரு வித ஈகோ வந்து உங்களிடம் குடியிருக்கும்.

இவ்வாறான கல்யாண வாழ்கையில், கணவனும் மனைவியும் ஒன்றாக காதலர் தினத்தை கொண்டாட வேண்டும். உங்கள் ஈகோ, டென்ஷன், வேலை, மற்ற எல்லா பிரச்சனைகளையும் தூர எறிந்துவிட்டு, அந்த ஒரு நாள் பழைய காதலர்களாக மாறி காதலர் தினத்தை கொண்டாடலாம். புது வருடத்தில் புது கொள்கைகளை கடைப்பிடிப்பதை போல, காதலர் தினத்தில் கணவனும் மனைவியும், குடும்பத்தில் இருவரும் என்ன என்ன விடயங்களில் விட்டுகொடுத்து நடக்க வேண்டும் என்று கூட யோசிக்கலாம். காதல் என்பது அன்பு, இதை வெளிப்படுத்த கணவன் மனைவிக்குள் எந்த ஒரு தயக்கமும் தேவை இல்லை. காதல் பயணம் கல்யாணத்தோடு முடிந்துவிட தேவையில்லை. ஆகையால், இந்த காதலர் தினம் முழுமையாக உங்களுக்கும்தான் தம்பதிகளே! அது தவிர, காதலர்களுக்கு இந்த காதலர் தினம் ஒன்றுதான் காதலை வெளிப்படுத்தும் தினம் இல்லை. அதற்க்காக காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்று நான் சொல்ல வரவேயில்லை...என்னை அடிக்க வந்து விடாதீர்கள். காதலர்கள் காதலர்களாக இருப்பதனால் ஒவ்வொரு நாளுமே அவர்களுக்கு காதலர் தினம்தான். ஆனால், காதலர்களை விட, காதலில் வெற்றி பெற்றவர்கள், கல்யாணத்தின் பிறகு பல காரணங்களால் பிஸியாக இருக்கலாம், ஒன்றாக நேரம் செலவிடுவது குறைந்திருக்கலாம்...அதனால் காதலர் தினம் என்பது கல்யாணமானவர்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டாடவே சிறந்தது :)
Have a great day!