Tuesday, August 11, 2009

புரிதல் என்பது

உலகத்தில் பல விடயங்களை எம்மால் முழுதாக புரிந்து கொள்ளவோ விளங்கிக்கொள்ளவோ தெரியவில்லை/முடியவில்லை. அந்த சக்தி யாரிடமும் இல்லை என்பதே உண்மை. கற்றல் கூட எம்மால் நினைக்கும் அளவுக்கு முடியாது. ஒருவன் இறக்கும் போது கூட "கற்றது கைம்மண்ணளவு" என்பது உண்மையாகத்தான் இருக்கும். ஒருவரால் கூடிய அளவு 5-10% தான் அவரது மூளையை பயன்படுத்துகின்றார்களாம். இது ஒன்றும் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த பட்டதோ என்றெல்லாம் எனக்கு தெரியாது.

அப்படி இருக்கும் போது, இன்னொருவரை எம்மால் எந்த காலத்திலும் முழுதாக புரிந்து கொள்ளவே முடியாது. ஏன் எங்களை எங்களாலே புரிந்து கொள்வது என்பது சிலசமயங்களில் முடியவில்லை. நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று யோசிக்க வைக்கும் தருணங்கள் எல்லோர் வாழ்விலும் நிச்சயம் இருந்திருக்கும். ஒரு மனிதனை சந்தோஷமான நிமிடத்தை விட கோபமான நிமிடம்தான் தடுமாற வைக்கிறது.
கோபம் என்பது என்ன? எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தால் வருவதா?
பல சமயங்களில் எனக்கு கோபம் வருகிறது என்று தெரிந்தால், அமைதியையே பதிலாக கொடுப்பேன். கோபம் தணியும் வரை பேச்சு வார்த்தை குறைவாகவே அல்லது அறவே இல்லாமல்தான் இருக்கும். ஆனால் அதே நேரம் என்னில் இருக்கும் weakness என்ன என்றால், கோபம் சட்டென்று தணிந்துவிடும். சில மணி நேரங்கள் அல்லது நாட்கள் செல்ல நானே எல்லாவற்றையும் மறந்து பழையபடி மாறிவிடுவேன். மன்னிப்பு என்னிடம் தாராளமாகவே கிடைக்கும். அப்போதெல்லாம் நினைத்து கொள்வேன் என்னை சரியாக புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாமையே இவர்கள் இப்படி நடக்க காரணமாக இருக்கிறது. சரி பரவாயில்லை, ஐந்து விரல்களும் ஒரே மாதிரியா என்ன.
அதற்காக நான் ஒரு நாளும் அனாவசியமாக கோபப்பட்டது இல்லை என்றில்லை. எனக்கும் அர்த்தமற்ற கோபங்கள் வருவதுண்டு ஆனால் மிக குறைவு. அம்மாவிடம் சில சமயம் கோபம் வரும் ஆனால் சில நிமிடப்பொழுதில் அது இல்லாமல் போய்விடும். எனது அடுத்த சொற்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மன்னிப்பு கேட்பதாகவே இருக்கும்..
ஆனால் அதே சமயம் எனது நண்பி ஒருத்தியுடன் இரண்டு வருடங்கள் பேசாமல் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் இருந்திருக்கிறேன். இன்னொருத்தியுடன் ஒரு வருடம் பேசாமல் இருந்திருக்கிறேன். இதெல்லாம் நான் ஆறாம் ஏழாம் கிரேட் படிக்கும்போதே.


கோபம் என்பது நம்மை ஆட்கொள்ள முதலே நாம் கோபத்தை ஆள தெரிந்திருந்தால் நல்லது. கோபம் எப்போது உருவாகிறது -எமக்கு பிடிக்காத ஒன்றை இன்னொருவர் செய்யும் போது அல்லது எமக்கு பிரியமான ஒன்று இல்லாமல் போகும் போது தானே.
இதற்கெல்லாம் காரணம் எந்த அளவு ஒருவரின் எதிர்பார்ப்புக்கள் உள்ளது என்பதே. அதேவேளை ஒரு மனிதன் எதிர் பார்ப்புக்கள் இல்லாமல் வாழவும் முடியாது. இந்த எதிர்பார்ப்புக்களே சின்ன சின்ன சந்தோஷங்களை தருபவை. ஏன், எதிர்பார்ப்புக்களே வாழ்க்கையின் அடிப்படையாக அமைகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு என்பது போல, எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. உங்களால் முடிந்தளவு இந்த எதிர்பார்ப்புக்களை மற்றவர்களிடம் இருந்து குறைத்தால், ஏமாற்றங்கள் குறையும். ஏமாற்றங்கள் குறைந்தால் கோபம் குறையும்.
முயன்ற வரைக்கும் மற்றவரின் இடத்திலிருந்து ஒரு விடயத்தை அறிவது சிறந்தது.. Empathy, as they say. ஒரு நோயாளியை பார்க்கும் போது, எந்த அளவு அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவர் இடத்தில் இருந்து யோசித்தால் தான், அவரின் வேதனையை புரிந்துகொள்ள முடியும். இதே போலதான், கோபம் எம்மை ஆக்கிரமிக்கும் போது எமது கோபம் நியாயமானதா என்று ஒரு கணம் யோசிப்பது அவசியம்.

அதே போல, அடுத்தவர்கள் எம்மில் கோபப்படுகிறார்கள் என்றால் உண்மையில் அவர்கள் கோபத்தில் ஞாயம் உண்டா, கோபப்பட வைத்த நாம்தான் காரணமா, இல்லை அவர்களுக்கு விளங்கும் படி அமைதியாக எடுத்து சொல்வதுதான் சரியா என்று யோசிக்க வேண்டும். அப்படி உங்கள் கோபத்தை ஒருபுறம் வைத்துவிட்டு சிந்தனை செய்தீர்களேயானால், பேச்சு முடிவு இரண்டும் தெளிவாகும். என்று அடியேன் நினைக்கிறேன்.
இதையெல்லாம் நானும் கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன் :)
இந்த பதிவுக்கு குறிப்பிட்ட நோக்கம் எல்லாம் கிடையாது. இந்த சிறியவளின் எண்ணப்பகிர்வு மட்டுமே!

Friday, February 13, 2009

காதலர் தினம் என்றால்...

காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? நான் உன் மீது என்றும் மாறாத காதல் வைத்திருக்கிறேன் என்று ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்துவதற்கா? இல்லை, காதல் என்ற ஒன்றுதான் நம் இருவரையும் இணைக்கிறது என்று கொண்டாடவா? முதலில், காதலர் தினம் காதலர்களால் மட்டுமே கொண்டாடப்படவேண்டிய ஒன்றா?

என்னை பொறுத்தவரை, காதலர் தினம் என்பது, காதலில் நீந்திக்கொண்டிருப்பவர்களை விட, காதலில் நீந்தி கரையேறியவர்கள் அதாவது காதலித்து திருமணம் செய்தவர்கள் காதலிக்கும் போது எப்படி அன்பாக இருந்தார்களோ அதே போல இருவரும் திருமணத்தின் பிற்பாடு வருகின்ற காதலர் தினங்களிலும் அந்த காதல் குறையாமல் அதே போல அன்பாக இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு காதலில் வெற்றி கண்டவர்கள் அதை கொண்டாட வேண்டும். இது காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு மட்டும் என்றில்லை, காதலிக்காமல் கல்யாணம் செய்து அதன் பின் காதலிக்க தொடங்கியவர்களுக்கும் பொருந்தும்.

காதலிக்கும் போது நிறைய விட்டு கொடுப்பீர்கள், சின்ன சின்ன சண்டைகள் இனிக்கும், காதலிக்கும் போது இன்னொருவரிடம் உள்ள நெகடிவ் விஷயங்கள் கண்ணுக்கு தெரியாது தெரிந்தாலும் அது ஒரு மட்டேராகவே இருக்காது...ஆனால் கல்யாணத்திற்கு பின், இவை எல்லாம் தலை கீழாக மாறி; பொசிடிவ் விஷயங்கள் கண்ணில் தெரியாமல் மற்றவரின் நெகடிவ்ஸ் மட்டுமே உங்கள் கண்ணை உறுத்தும், முன்னர் சிறிதும் சலிக்காத நீண்ட உரையாடல்கள் பின்னர் சலிக்கும் ...ஏன் கல்யாணத்தின் பின்னர் இன்னொருவருடைய அழகை புகழகூட மனம் வராது, ஒரு வித ஈகோ வந்து உங்களிடம் குடியிருக்கும்.

இவ்வாறான கல்யாண வாழ்கையில், கணவனும் மனைவியும் ஒன்றாக காதலர் தினத்தை கொண்டாட வேண்டும். உங்கள் ஈகோ, டென்ஷன், வேலை, மற்ற எல்லா பிரச்சனைகளையும் தூர எறிந்துவிட்டு, அந்த ஒரு நாள் பழைய காதலர்களாக மாறி காதலர் தினத்தை கொண்டாடலாம். புது வருடத்தில் புது கொள்கைகளை கடைப்பிடிப்பதை போல, காதலர் தினத்தில் கணவனும் மனைவியும், குடும்பத்தில் இருவரும் என்ன என்ன விடயங்களில் விட்டுகொடுத்து நடக்க வேண்டும் என்று கூட யோசிக்கலாம். காதல் என்பது அன்பு, இதை வெளிப்படுத்த கணவன் மனைவிக்குள் எந்த ஒரு தயக்கமும் தேவை இல்லை. காதல் பயணம் கல்யாணத்தோடு முடிந்துவிட தேவையில்லை. ஆகையால், இந்த காதலர் தினம் முழுமையாக உங்களுக்கும்தான் தம்பதிகளே! அது தவிர, காதலர்களுக்கு இந்த காதலர் தினம் ஒன்றுதான் காதலை வெளிப்படுத்தும் தினம் இல்லை. அதற்க்காக காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்று நான் சொல்ல வரவேயில்லை...என்னை அடிக்க வந்து விடாதீர்கள். காதலர்கள் காதலர்களாக இருப்பதனால் ஒவ்வொரு நாளுமே அவர்களுக்கு காதலர் தினம்தான். ஆனால், காதலர்களை விட, காதலில் வெற்றி பெற்றவர்கள், கல்யாணத்தின் பிறகு பல காரணங்களால் பிஸியாக இருக்கலாம், ஒன்றாக நேரம் செலவிடுவது குறைந்திருக்கலாம்...அதனால் காதலர் தினம் என்பது கல்யாணமானவர்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டாடவே சிறந்தது :)
Have a great day!

Sunday, February 08, 2009

தொலைந்து போனவர்கள்

விடிந்ததென்பாய் நீ
அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை

மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால்- உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா?- வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்?- வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல

குளித்தேன் என்பாய் யுகயுகமாய்- நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே- நீ
அளித்த தெதுவும் உனதல்ல

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய்- ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய்- உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம்- பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய்- உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய்- உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்

நான்’ என்பாய் அது நீயில்லை- வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
'ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?

அப்துல் ரகுமான் (தொகுப்பு - சுட்டுவிரல்)

Thursday, January 15, 2009

அனுபவம் புதிது!

நான் நிறைய தமிழ் படங்கள் பார்ப்பதுண்டு. ஆனாலும் முன்பு மாதிரி இப்போது அவ்வளவாக படங்கள் பார்ப்பதற்கு முடிவதில்லை, காரணம் படிப்பு. இப்போது ஏன் இதைப்பற்றி எழுதுகிறேன் என்றால்.. தமிழ் படங்களில் பார்க்கும் சில விடயங்களை (குறிப்பாக காதலில் உருகும் காட்சிகளை) சில நாட்களாக நேரில் காணுகின்றேன்.

நான் என்னதான் கவிதை எழுதினாலும், அது கற்பனை மட்டும்தான் என்ற உண்மையை ஏற்றுகொள்பவர்கள் சிலரே (என்னோட மொக்கையான கவிதைகளை வாசிச்ச பிறகாவது தெரிய வேண்டாமா?). குழப்புகிறேனா? சரி, அதை விடுங்கள், எமது தமிழ் சினிமாவில் காதலை சொல்ல முன்பு, காதல் சொல்லும் தருணம், காதல் சொன்ன பின்பு என்று பிரித்து பிரித்து காட்சிகள் வைப்பார்கள்.

அதில் பல படங்களில், பல நடிகர்கள், கண்ணாடி முன் தான் முதலில் காதலை சொல்வார்கள். ஆயிரம் தரம். தற்போதைக்கு ஞாபத்துக்கு வருவது மின்சார கனவில் அர்விந்த் சாமி.
வீட்டு கண்ணாடி, குளியலறை கண்ணாடி என வித விதமான கண்ணாடி முன்பு ஒப்பித்து பார்ப்பார். அதை பார்க்கும் போதெல்லாம், ஐயோ என்ன லூசா இவருக்கு? இப்பிடி ஒத்திகை எல்லாம் பார்த்துக்கொண்டு.....ஒரு ஆணுக்கு அவளவு தைரியம் இல்லையா? இப்பிடியெல்லாம் நிஜத்தில் இருக்கவே இருக்காது...இந்த டைரக்டர்கள் காதில பூ சுத்துறாங்க...என்று தான் நினைப்பேன்.
என்ன ஆச்சரியம்!! அதுதான் உண்மை போல இல்ல, உண்மையேதான்! ஒரு ஹாய் சொல்வதை கூட ஒரு தடவையேனும் எப்படி சொல்லலாம் என்று யோசிக்காமல் சொல்ல மாட்டார்கள் போல இருக்கிறது.

இந்த பதிவுக்கு காரணம் அண்மையில் காதலில் விழுந்த எனது நெருங்கிய தோழிதான். அது என்னத்தை சொல்வது? காதலிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தா...தோழியாக அமைந்து விட்ட காரணத்தால் எனக்கல்லவோ இம்சை..! (ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் !!!!) ;)

என்ன சொல்லட்டும், எப்பிடி சொல்லட்டும், எப்ப சொல்லட்டும்...? எனக்கோ இந்த கேள்விகளுக்கு உண்மையில் எப்படி பதில் சொல்வது என்று புரியவில்லை. I have had a number of crushes but not a love! இந்த காதல் விடயத்தில் அனுபவம் இல்லாத ஆளாய் நான் போய் விட்டது எனது தோழியின் துரதிஷ்டம்.

உண்மை என்ன என்றால், பல தடவைகள் நாங்கள் எல்லோரும் காதல் பற்றி பேசியதுண்டு. அதில் எனக்கு பிடிக்கவேண்டுமென்றால் ஒருவன் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் தொடங்கி பல விடயங்களை எல்லோரும் பகிர்ந்த்ததுண்டு. ஆனால், உண்மையில் எனது தோழி இப்போது ஒன்றும் தெரியாதவள் போல இருக்கிறா. அதாவது, அந்த அதிஷ்டசாலியிடம் எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது என்று பதில் சொல்வது ரொம்ப கஷ்டமாக உள்ளதாம். பட பட என்று உள்ளதாம். Heart beat நிற்பது போல உள்ளதாம். தனக்கு தானே பேசி கொள்கிறாள். தனக்குள் தானே சிரிப்பது வேறு நடக்கிறது! காலையில் அனுப்பும் text ஐ இரவே டைப் பண்ணி draft வைக்கட்டுமோ என்று கேக்கிறாள். ரொம்ப பாவமாக உள்ளது.

பதில் சொல்வதற்கே இவளவு கஷ்டம் என்றால், முதல் முதலில் காதலை சொல்பவர்கள் எவ்வளவு கஷ்டபடுவார்களோ??!??!!! ம்ம்.......மொத்தத்தில் காதல் ஒருவரை பைத்தியமாக்கும் போல தெரிகிறது.
எனக்கு தலை சுற்றுகிறது! :) I love you my friend, and Good luck to you.

இந்த பதிவு விடயம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும்...உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!! :))

இதுவரையிலான பின்னூட்டங்களின் விளைவாக: ப்ளீஸ் நம்புங்கப்பா....இது என் தோழியை பற்றிய பதிவுதான். என்னை பற்றி அல்ல! எப்பிடி புரிய வைக்கிறது? தோழி யாரென்று சொன்னால் வில்லங்கமாகி விடும் என்ற காரணத்தால் பெயரை குறிப்பிட வில்லை. அவளவுதான்....phew!

Friday, January 09, 2009

Journalism Today

Journalism is one of the most exciting jobs, I always thought. In fact, there was one point when I had a glimpse of thought of becoming a journalist. Well, there were many other jobs which I, at least at some point, was attracted to. Wherever and whatever, if there is a corruption, then media is the way to alert the appropriate so and so to make an action or correct it. And of course journalism is a risky job where they have to meet their occupational hazards of getting arrested, injured etc to get the story out. If a person takes such risks in his/her life, they would definitely not want to take bribes and spread their own opinions. And even if they want, it won't be let happen because telecasting or voicing a news is not an individual work. But there have been kidnaps and murders of media people, which are never taken into any serious account by the regarding authorities, but the voices that rise for media-freedom are seen as just clamoring.

The Journalists would take the risk to get out a story but they are not entitled to use the so-called media freedom to actually deliver the story to the public and if they do expose audaciously, it would be right at the cost of their jobs and lives.

I was inspired to write this, after hearing constitutive attacks on Journalists and Media recently in a number of countries. Totally indigestible, I would say.

There was an attack on one of the television stations in Gaza on the 5th Jan, an Indian Journalist was arrested and there were other events like this on the same day alone. On the following day, there was an attack on one of the largest media in Sri Lanka. Done at gunpoint. And on a couple of days later, a top Journalist/Editor was killed. This profession, which supposed to be a protective one, is now the most dangerous profession not only in Sri Lanka but also in many others. It is a job that is keying on ensuring a country's good governance and in that case, a freedom and protection should be involuntarily available to the media, which is of course not true in the case of what is happening around the world.

One of the main rules in Journalism is to present a news in a balanced, objective manner as well as keeping up the integrity. To do this, they should be free to report the truth, just as they have seen it. On the other hand, I must agree that there are problems with the professionalism and trustworthiness of Media. How many times you have read news that is mostly biased? But what can the public do with it, other than just shrugging your shoulders, tut tut, and move on. The journalists play a key role in doing public services but if one is un-trustworthy, and reporting one sided information whether intentionally or unintentionally, there is nothing that can be done. However, a citizen can clearly say when reading a newspaper if what had been written is leaning one way or another. But I strongly believe this can not be solely blamed on a journalist. Professional ethics should be made aware if not being maintained and not by violence.

I think I have written enough to bore you lot :) Before I draw the curtains, I have to point out a few things. A, This post was purely unintentional and non-specific to anyone except that I used my very own space to share what I think. B, I have chosen to write in this lang, because I thought I could be more precise in what I am saying. Thus, no mistaking of me please ;).

And sorry for making this way too long. Couldn't keep it any more succinct than this.

Monday, January 05, 2009

பட்டாம்பூச்சி விருது 2


விருது பற்றி இன்னுமொரு பதிவு. சில நாட்களுக்கு முதல் புதியவன் எனக்கு பட்டாம்பூச்சி விருது தந்து இருக்கிறார். எனக்கு தெரியாமல் போய் விட்டது. ஏன் என்று கேட்காதீர்கள்..எல்லாம் ஆடிக்கு ஒருக்கால் ஆவணிக்கு ஒருக்கால் மட்டும் நான் வலைபூவுக்கு வரும் காரணம்தான். :) இருந்தும் எனக்கு இந்த விருது இரண்டு தடவை கிடைத்தது விந்தை! I love you all out there!

விருது தந்த புதியவனுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் :) தாமதமாக உணர்ந்தமைக்கு மன்னிக்கவும் :) Thanks.

Sunday, January 04, 2009

Butterfly Award

குறுகிய காலத்தில் அறிமுகமாயிருந்தாலும் என்னை நினைவு கூர்ந்து, விருது வழங்கிய இரவீ க்கு எனது நன்றிகள் :) நான் வலைப்பூவில் இணைந்து சில மாதங்கள் என்பதாலும், நேரம் இடம் கொடுக்காத காரணத்தால் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவுகள் எழுதுவதாலும், இந்த வலைப்பூ வட்டத்தில் இருக்கும் ஏனைய நண்பர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத முடியவில்லை.
இருந்தாலும்.....நான் ஆடிக்கு ஒருக்கா ஆவணிக்கு ஒருக்கா என்று பதிவு எழுதினாலும், தவறாமல் வந்து படித்து பின்னூட்டம் இடும் இனிய நண்பர்கள் உள்ளார்கள். அதில் குறிப்பிடும் படியாக, குமித்தா, சரவணகுமார், திவ்யா, புதியவன், அதிரை ஜமால் & அண்மைக்காலமாக இரவீ, விஜய், வண்ணத்துபூச்சியார் (சூர்யா), பூர்ணிமா சரண் மற்றும் பலர்.

உங்கள் அனைவருக்கும் எனது தாழ்மையான நன்றிகள்.

இந்த Butterfly Award யாருக்கு கொடுப்பது என்று யோசித்தேன், அனேகமாக இங்கு குறிப்பிட்டவர்கள் விருது பெற்றவர்கள் ;). இன்னும் விருது பெறாமல் இருக்கும் ஒரு சிலரை தேர்ந்தெடுத்துள்ளேன்.....நீங்கள் ஏற்கனவே கொடுக்கப்படவராக இருந்தால் மன்னிக்கவும் :) இதையும் ஏற்று கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
  • ஒரு பதிவு கூட விடாமல் தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிடும் இனிய தோழி குமித்தா வுக்கும்

  • அதே போல் சளைக்காமல், நான் பதிவு பக்கமே வராமல் இருந்தாலும் விருது, தொடர் விளையாட்டுகளில் என்னை மறக்காமல் மாட்டிவிடும் சரவணகுமார் க்கும்

  • என் வலைப்பக்கம் தலை காட்டாமல் இருந்தாலும், சிறந்த இடுகைகளை எழுதும் சகாராவின் புன்னைகை க்கும்

இந்த Butterfly விருதை வழங்குகிறேன். இதற்கு காரணமாக இருந்த இரவீக்கும் எனது நன்றிகள் :)