Sunday, February 08, 2009

தொலைந்து போனவர்கள்

விடிந்ததென்பாய் நீ
அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை

மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால்- உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா?- வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்?- வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல

குளித்தேன் என்பாய் யுகயுகமாய்- நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே- நீ
அளித்த தெதுவும் உனதல்ல

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய்- ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய்- உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம்- பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய்- உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய்- உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்

நான்’ என்பாய் அது நீயில்லை- வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
'ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?

அப்துல் ரகுமான் (தொகுப்பு - சுட்டுவிரல்)

15 comments:

ஆதவா said...

இது உங்கள் கவிதை இல்லையா???

யோசிக்கும் படி இருக்கிறது

புதியவன் said...

அப்துல் ரகுமானின் கவிதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது...

நட்புடன் ஜமால் said...

எத்தனை பேர் தொலைந்தார்கள்

நட்புடன் ஜமால் said...

மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால்- உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.\\

அருமை.

நட்புடன் ஜமால் said...

கற்றேன் என்பாய் கற்றாயா?- வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை\\

மிகவும் அருமை.

நட்புடன் ஜமால் said...

\\நான்’ என்பாய் அது நீயில்லை- வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
'ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?\\

அருமை.

நட்புடன் ஜமால் said...

அட

கவிக்கோவோடதா ...

Anonymous said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் மது...

MSK / Saravana said...

நான் நீங்க எழுதின கவிதை என்று நினைத்தே படித்து முடித்துவிட்டேன்..

அப்துல் ரகுமானின் கவிதை பகிர்வுக்கு நன்றி மது..
:)

தமிழ் மதுரம் said...

சிந்தனையைத் தூண்டும் கவிதையைத் தந்துள்ளீர்க்ள். தொடருங்கோ...

Divya said...

Good one Mathu, thanks for sharing:))

- இரவீ - said...

கவிக்கோவின் வரிகள் எப்போதுமே இப்படித்தான்...
(நெஞ்சு படபடக்க வைத்துவிட்டது...)

நான் மிக சிறுவயதில் படித்த இவரின் வார்த்தை இன்னமும் என்னில் ...
"சிறகுகள் இரண்டு வேண்டுகிறேன்,
பறந்து வந்து பார்ப்பதற்கு அல்ல,
வெகு தூரம் சென்று மறப்பதற்கு"

என்னை தொலைந்தவர் பட்டியலில் பெயர் தேட வைத்த உங்களுக்கு மிக்க நன்றி ...

Kumiththa said...

அருமையான கவிதையை பகிர்ந்ததுக்கு நன்றி மது!

- இரவீ - said...

ஏன் ஆளையே காணும் ? தேர்வா?
விரைவில் பதிவிடுங்கள் ...

Mathu said...

Ravee: thanks for ur kind. I was a little busy. I will be back soon with a good post. take care.