நான் நிறைய தமிழ் படங்கள் பார்ப்பதுண்டு. ஆனாலும் முன்பு மாதிரி இப்போது அவ்வளவாக படங்கள் பார்ப்பதற்கு முடிவதில்லை, காரணம் படிப்பு. இப்போது ஏன் இதைப்பற்றி எழுதுகிறேன் என்றால்.. தமிழ் படங்களில் பார்க்கும் சில விடயங்களை (குறிப்பாக காதலில் உருகும் காட்சிகளை) சில நாட்களாக நேரில் காணுகின்றேன்.
நான் என்னதான் கவிதை எழுதினாலும், அது கற்பனை மட்டும்தான் என்ற உண்மையை ஏற்றுகொள்பவர்கள் சிலரே (என்னோட மொக்கையான கவிதைகளை வாசிச்ச பிறகாவது தெரிய வேண்டாமா?). குழப்புகிறேனா? சரி, அதை விடுங்கள், எமது தமிழ் சினிமாவில் காதலை சொல்ல முன்பு, காதல் சொல்லும் தருணம், காதல் சொன்ன பின்பு என்று பிரித்து பிரித்து காட்சிகள் வைப்பார்கள்.
அதில் பல படங்களில், பல நடிகர்கள், கண்ணாடி முன் தான் முதலில் காதலை சொல்வார்கள். ஆயிரம் தரம். தற்போதைக்கு ஞாபத்துக்கு வருவது மின்சார கனவில் அர்விந்த் சாமி.
வீட்டு கண்ணாடி, குளியலறை கண்ணாடி என வித விதமான கண்ணாடி முன்பு ஒப்பித்து பார்ப்பார். அதை பார்க்கும் போதெல்லாம், ஐயோ என்ன லூசா இவருக்கு? இப்பிடி ஒத்திகை எல்லாம் பார்த்துக்கொண்டு.....ஒரு ஆணுக்கு அவளவு தைரியம் இல்லையா? இப்பிடியெல்லாம் நிஜத்தில் இருக்கவே இருக்காது...இந்த டைரக்டர்கள் காதில பூ சுத்துறாங்க...என்று தான் நினைப்பேன்.
என்ன ஆச்சரியம்!! அதுதான் உண்மை போல இல்ல, உண்மையேதான்! ஒரு ஹாய் சொல்வதை கூட ஒரு தடவையேனும் எப்படி சொல்லலாம் என்று யோசிக்காமல் சொல்ல மாட்டார்கள் போல இருக்கிறது.
இந்த பதிவுக்கு காரணம் அண்மையில் காதலில் விழுந்த எனது நெருங்கிய தோழிதான். அது என்னத்தை சொல்வது? காதலிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தா...தோழியாக அமைந்து விட்ட காரணத்தால் எனக்கல்லவோ இம்சை..! (ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் !!!!) ;)
என்ன சொல்லட்டும், எப்பிடி சொல்லட்டும், எப்ப சொல்லட்டும்...? எனக்கோ இந்த கேள்விகளுக்கு உண்மையில் எப்படி பதில் சொல்வது என்று புரியவில்லை. I have had a number of crushes but not a love! இந்த காதல் விடயத்தில் அனுபவம் இல்லாத ஆளாய் நான் போய் விட்டது எனது தோழியின் துரதிஷ்டம்.
உண்மை என்ன என்றால், பல தடவைகள் நாங்கள் எல்லோரும் காதல் பற்றி பேசியதுண்டு. அதில் எனக்கு பிடிக்கவேண்டுமென்றால் ஒருவன் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் தொடங்கி பல விடயங்களை எல்லோரும் பகிர்ந்த்ததுண்டு. ஆனால், உண்மையில் எனது தோழி இப்போது ஒன்றும் தெரியாதவள் போல இருக்கிறா. அதாவது, அந்த அதிஷ்டசாலியிடம் எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது என்று பதில் சொல்வது ரொம்ப கஷ்டமாக உள்ளதாம். பட பட என்று உள்ளதாம். Heart beat நிற்பது போல உள்ளதாம். தனக்கு தானே பேசி கொள்கிறாள். தனக்குள் தானே சிரிப்பது வேறு நடக்கிறது! காலையில் அனுப்பும் text ஐ இரவே டைப் பண்ணி draft வைக்கட்டுமோ என்று கேக்கிறாள். ரொம்ப பாவமாக உள்ளது.
பதில் சொல்வதற்கே இவளவு கஷ்டம் என்றால், முதல் முதலில் காதலை சொல்பவர்கள் எவ்வளவு கஷ்டபடுவார்களோ??!??!!! ம்ம்.......மொத்தத்தில் காதல் ஒருவரை பைத்தியமாக்கும் போல தெரிகிறது.
எனக்கு தலை சுற்றுகிறது! :) I love you my friend, and Good luck to you.
இந்த பதிவு விடயம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும்...உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!! :))
இதுவரையிலான பின்னூட்டங்களின் விளைவாக: ப்ளீஸ் நம்புங்கப்பா....இது என் தோழியை பற்றிய பதிவுதான். என்னை பற்றி அல்ல! எப்பிடி புரிய வைக்கிறது? தோழி யாரென்று சொன்னால் வில்லங்கமாகி விடும் என்ற காரணத்தால் பெயரை குறிப்பிட வில்லை. அவளவுதான்....phew!
44 comments:
\\”அனுபவம் புதிது”\\
ஆஹா ஆஹா
ஆர்வமான தலைப்பு ...
உங்க திறமைய நினைச்சா எனக்கு ...
என்னத்த சொல்ல ...
எப்படிங்க மது - அது ...
உங்கள் நண்பியின் காதல் கைகூட நானும் வாழ்த்துகிறேன்!
//இந்த பதிவு விடயம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும்...உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!! :))//
பாவங்க உங்க தோழி!!!
அன்புடன் அருணா
//அண்மையில் காதலில் விழுந்த எனது நெருங்கிய தோழிதான்.//
நம்பிட்டோம்..
(எங்களுக்கு என்னமோ அந்நியன் மாதிரி மேட்டரோ தோணுது. )
//.தோழியாக அமைந்து விட்ட காரணத்தால் எனக்கல்லவோ இம்சை..! (ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் !!!!) ;)//
கவலையே படாதீங்க...
குஷி ன்னு ஒரு தமிழ்படம். அதுல ஜோதிகா கூட தோழியாத்தான் வர்ரார்.
//காலையில் அனுப்பும் text ஐ இரவே டைப் பண்ணி draft வைக்கட்டுமோ என்று கேக்கிறாள்.//
ஆனா பிளாக் மட்டும் ஃப்ரூப் கூட பார்க்காம நேரடியா பப்ளிஷ் பண்ணிடுவாரே....
ஹ ஹ ,
ம்ம், காதல் பண்ணும் பாடிதுதானோ!
நம்ம என்ன சொல்ல!
யாராச்சும் சொல்லிக்குடுங்கப்பா....
உங்கள் friend காதலை வைச்சு பதிவா??
நம்பறமாதிரி இல்லயே:))
just kidding Mathu!
Post nalla irukku:))
wishes to your FRIEND who is in love:))
இந்தக் காதலே இப்படித்தான் போல இருக்கு...?
எவவளவோ கதைகளில் கவிதைகளில்
படித்திருப்போம்...எத்தனையோ பேருக்கு
ஐடியா கொடுத்திருப்போம்...நமக்குன்னு
வந்தா மட்டும்...கொஞ்சம் நெறையவே
கஷ்டம் தான்...உங்க தோழியின் காதல்
நிறைவேற வாழ்த்துக்கள் மது...
//அந்த அதிஷ்டசாலியிடம் எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது என்று பதில் சொல்வது ரொம்ப கஷ்டமாக உள்ளதாம். பட பட என்று உள்ளதாம். Heart beat நிற்பது போல உள்ளதாம். தனக்கு தானே பேசி கொள்கிறாள். தனக்குள் தானே சிரிப்பது வேறு நடக்கிறது! காலையில் அனுப்பும் text ஐ இரவே டைப் பண்ணி draft வைக்கட்டுமோ என்று கேக்கிறாள். ரொம்ப பாவமாக உள்ளது.
//
போங்க எனக்கு வெக்கம் வெக்கமா வருதுன்னு சொல்றாங்க போல உங்க ப்ரெண்டு! :))))
போட்டோ நல்ல செலக்ஷன்!
(உங்க ப்ரெண்டுக்கா அல்லது உங்களுக்கா என்ற ஒரு கேள்விக்குறி எழுவது பொதுவாய் தவிர்க்கப்படாத ஒன்றாக பதிவில் தெரிகிறது :)))
ஓ!! இது நிஜமாவே உங்க தோழியைப் பற்றிய பதிவு தானா.. நம்பிட்டோம்!!
இந்த காதலே இப்படிதாங்க..
தைரியமா காதலை சொல்ல சொல்லுங்க
இல்லேனா அப்புறம் ரொம்ப கஷ்டமாயிடும்
உங்கள் தோழியின் காதல் நிறைவேற வாழ்த்துக்கள்
நாங்கள் நம்பிட்டம்........
நட்புடன் ஜமால் said...
\\”அனுபவம் புதிது”\\
ஆஹா ஆஹா
ஆர்வமான தலைப்பு ...
நன்றி :)
-----------------------------------
உங்க திறமைய நினைச்சா எனக்கு ...
என்னத்த சொல்ல ...
எப்படிங்க மது - அது ...
அது.......??
சொல்ல வந்ததை சொல்லி இருக்கலாமே ஜமால்...;) அட நம்புங்க அண்ணா!
Kumiththa said...
உங்கள் நண்பியின் காதல் கைகூட நானும் வாழ்த்துகிறேன்!
:)
அன்புடன் அருணா said...
//இந்த பதிவு விடயம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும்...உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!! :))//
பாவங்க உங்க தோழி!!!
அன்புடன் அருணா
ஆமா, பாக்க ரொம்ப பாவமாதான் இருந்திச்சு...;)
SUREஷ் said...
//அண்மையில் காதலில் விழுந்த எனது நெருங்கிய தோழிதான்.//
நம்பிட்டோம்..
(எங்களுக்கு என்னமோ அந்நியன் மாதிரி மேட்டரோ தோணுது. )
அந்நியன் மேட்டேரா....பாத்திங்களா...நீங்க நம்பலையே...
------------------------------------
கவலையே படாதீங்க...
குஷி ன்னு ஒரு தமிழ்படம். அதுல ஜோதிகா கூட தோழியாத்தான் வர்ரார்.
நான் கவலையே படலையே :)
-------------------------------------------
//காலையில் அனுப்பும் text ஐ இரவே டைப் பண்ணி draft வைக்கட்டுமோ என்று கேக்கிறாள்.//
ஆனா பிளாக் மட்டும் ஃப்ரூப் கூட பார்க்காம நேரடியா பப்ளிஷ் பண்ணிடுவாரே....
ஓ!! உங்களுக்கு அவாவ தெரியுமா
சகாராவின் புன்னகை said...
ஹ ஹ ,
ம்ம், காதல் பண்ணும் பாடிதுதானோ!
நம்ம என்ன சொல்ல!
யாராச்சும் சொல்லிக்குடுங்கப்பா....
யாருக்கு? உங்களுக்கா?
Divya said...
உங்கள் friend காதலை வைச்சு பதிவா??
நம்பறமாதிரி இல்லயே:))
just kidding Mathu!
Post nalla irukku:))
wishes to your FRIEND who is in love:))
நீங்களுமா திவ்யா? :( lol. Thanks. I convey ur wishes to her :)
புதியவன் said...
இந்தக் காதலே இப்படித்தான் போல இருக்கு...?
எவவளவோ கதைகளில் கவிதைகளில்
படித்திருப்போம்...எத்தனையோ பேருக்கு
ஐடியா கொடுத்திருப்போம்...நமக்குன்னு
வந்தா மட்டும்...கொஞ்சம் நெறையவே
கஷ்டம் தான்...உங்க தோழியின் காதல்
நிறைவேற வாழ்த்துக்கள் மது...
ஓ அப்படியா? வாழ்த்துக்களுக்கு நன்றிகள் புதியவன். :)
ஆயில்யன் said...
போங்க எனக்கு வெக்கம் வெக்கமா வருதுன்னு சொல்றாங்க போல உங்க ப்ரெண்டு! :))))
:))
போட்டோ நல்ல செலக்ஷன்!
தாங்க்ஸ் :)
(உங்க ப்ரெண்டுக்கா அல்லது உங்களுக்கா என்ற ஒரு கேள்விக்குறி எழுவது பொதுவாய் தவிர்க்கப்படாத ஒன்றாக பதிவில் தெரிகிறது :)))
அதுதான் எப்படி என்று இன்னும் புரியவில்லை...மீண்டும் படித்து பார்த்தேன்...எதை வைத்து இது என் சுய கதை என்று நினைக்கிறார்கள் ??..ம்ம்ம்...
PoornimaSaran said...
ஓ!! இது நிஜமாவே உங்க தோழியைப் பற்றிய பதிவு தானா.. நம்பிட்டோம்!!
பாத்தீங்களா பூர்ணிமா? நம்பலதானே? :(
அபுஅஃப்ஸர் said...
இந்த காதலே இப்படிதாங்க..
தைரியமா காதலை சொல்ல சொல்லுங்க
இல்லேனா அப்புறம் ரொம்ப கஷ்டமாயிடும்
உங்கள் தோழியின் காதல் நிறைவேற வாழ்த்துக்கள்
உங்கள் பின்னூட்டம் ஒன்றுதான் இந்த பதிவின் காரணத்தை உண்மையாக புரிந்ததாக தெரிகிறது ;) நன்றிறிறி :)வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் :)
கவின் said...
நாங்கள் நம்பிட்டம்........
Hope this is not a sarcastic statement ;) இருந்தாலும் நம்பினா மாதிரி தெரியவில்லையே.....
பதில் சொல்வதற்கே இவளவு கஷ்டம் என்றால், முதல் முதலில் காதலை சொல்பவர்கள் எவ்வளவு கஷ்டபடுவார்களோ??!??!!! ம்ம்.......மொத்தத்தில் காதல் ஒருவரை பைத்தியமாக்கும் போல தெரிகிறது///
காதல் பைத்தியங்கள்
நிறைய இருக்கு.
இன்னும்
நிறய
பார்ப்பீர்கள்!
தேவா...
அட.. அது வேற ஒன்னும் இல்லை மது.. பொதுவா இந்த காதல் மாதிரியான விஷயங்களில், நண்பன் காதல் அல்லது நண்பி காதல் என்று பிறரிடம் சொல்லி நமக்கான ஐடியாக்களை பெற்று கொள்வது தொன்று தொட்ட ஒன்று..
[இதை படித்துவிட்டு இது என் சொந்த அனுபவம் என்று உங்கள் மனதில் ஒரு சந்தேகம் வந்தால், அதுதான் நமது பண்பாடு..]
//காலையில் அனுப்பும் text ஐ இரவே டைப் பண்ணி draft வைக்கட்டுமோ என்று கேக்கிறாள். //
இதுதாங்க காதல்.. :)
சரி.. சரி.. நான் நம்பிவிடுகிறேன் இந்த பதிவை.. ;)
உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள்..
கொஞ்சம் எழுத்து பிழைகளை தவிர்க்கவும்..
அப்பறம்.. இந்த profile photo-ல இருக்கும் இந்த cute girl மிக அழகு..
காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..
:))
ungal Thozikku valthugal.
Sekkiram kadalai solli vida sollungal.
thozien kadhal kai kooda meendum valthugal.
உண்மையாலுமே உங்கள் தோழி பற்றித் தானே.. நம்பிட்டோம்.. ;)
உங்கள் கவிதைகள் மொக்கைன்னு சொல்லி கவிதைகளையே காயப்படுத்திட்டீங்களே..
(அதை நாங்களே எப்படி சொல்வது என்று யாரோ சொல்வதும் கேட்கிறது ;) )
என்ன தான் சொல்லுங்கள், நான் கேள்விப்பட்ட வரை காதலிப்பதை விட,காதல் வரும் தருணங்கள் தான் மிக இனிமையும் சுவாரஸ்யமும் ஆனவை. கீடுப் பாருங்கள் உங்கள் தோழியை - அவர் காதலில் விழுந்த பிறகு.. ;)
அந்த மின்சாரக்கனவு அர்விந்த்ஸ்வாமியை நான் ரொம்பவே ரசித்தேன்..
Thevanmayam
//காதல் பைத்தியங்கள்
நிறைய இருக்கு.
இன்னும்
நிறய
பார்ப்பீர்கள்!
தேவா...//
ஓ!! ஒகே..:) நன்றி :
Saravana Kumar MSK
அட.. அது வேற ஒன்னும் இல்லை மது.. பொதுவா இந்த காதல் மாதிரியான விஷயங்களில், நண்பன் காதல் அல்லது நண்பி காதல் என்று பிறரிடம் சொல்லி நமக்கான ஐடியாக்களை பெற்று கொள்வது தொன்று தொட்ட ஒன்று..
[இதை படித்துவிட்டு இது என் சொந்த அனுபவம் என்று உங்கள் மனதில் ஒரு சந்தேகம் வந்தால், அதுதான் நமது பண்பாடு..]
நீங்க சொன்னது உங்கள் சொந்த அனுபவமோ என்று உண்மையில் நான் நினைக்கவில்லை...காதலுக்கு தொன்று தொட்டு வரும் என்று சொல்லக்கூடிய பண்பாடெல்லாம் இருக்கா......ம்ம்ம்....ஒகே. :)
//காலையில் அனுப்பும் text ஐ இரவே டைப் பண்ணி draft வைக்கட்டுமோ என்று கேக்கிறாள். //
இதுதாங்க காதல்.. :)
ஓ... அவளவுதானா...sounds very simple. :) I ll tell her.
Saravana Kumar MSK said...
சரி.. சரி.. நான் நம்பிவிடுகிறேன் இந்த பதிவை.. ;)
உங்கள் தோழிக்கு வாழ்த்துக்கள்..
சரி சரி என்று சொல்வதை பார்த்தால் உண்மையாக சொல்வது போல இல்லையே...சரி இருந்தாலும் நன்றி :)
கொஞ்சம் எழுத்து பிழைகளை தவிர்க்கவும்..
எந்த எழுத்து பிழைகள் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருக்குமே...திருப்பி படித்தேன்...ஆனால் தெரியவில்லை...:(
PS: ஓ இதைத்தான் ப்ரூப் கூட பார்க்காமல் போஸ்ட் பண்ணிவிடுவது என்று Sureஷ் மேலே சொன்னாரா? இப்போதுதான் புரிகிறது!
அப்பறம்.. இந்த profile photo-ல இருக்கும் இந்த cute girl மிக அழகு..
Thanks.
கடையம் ஆனந்த் said...
:))
:)))
அகில் பூங்குன்றன் said...
ungal Thozikku valthugal.
Sekkiram kadalai solli vida sollungal.
thozien kadhal kai kooda meendum valthugal.
நன்றி :) தோழியிடம் சொல்லி விடுகிறேன்..:)
LOSHAN said...
உண்மையாலுமே உங்கள் தோழி பற்றித் தானே.. நம்பிட்டோம்.. ;)
நீங்க கூடவா....:)
உங்கள் கவிதைகள் மொக்கைன்னு சொல்லி கவிதைகளையே காயப்படுத்திட்டீங்களே..
(அதை நாங்களே எப்படி சொல்வது என்று யாரோ சொல்வதும் கேட்கிறது ;) )
என்ன தான் சொல்லுங்கள், நான் கேள்விப்பட்ட வரை காதலிப்பதை விட,காதல் வரும் தருணங்கள் தான் மிக இனிமையும் சுவாரஸ்யமும் ஆனவை. கீடுப் பாருங்கள் உங்கள் தோழியை - அவர் காதலில் விழுந்த பிறகு.. ;)
கேட்டேன்...அதுக்கு அவா "Oh is it" என்று கேக்கிறா...என்ன செய்ய... :))
-அதுதான் அவா காதல்ல already விழுந்திட்டா என்று பதிவில் திருப்பி திருப்பி சொல்லி இருக்கனே :)....
அந்த மின்சாரக்கனவு அர்விந்த்ஸ்வாமியை நான் ரொம்பவே ரசித்தேன்..
நானும் தான் :)
i ve read all your writings. they r lovely. would like to c the writes foto.
;)
y dont u upload your foto mathu?
Anonymous: "why don't I?"..ermm.. It might be more or less for the same reason as why you wanted to be anonymous when you asked .... :))
Thanks for the words about my writings. :)
ஜமால் அவர்கள் அறிமுகத்தில் ..எனது வருகை ..படித்தேன் ரசித்தேன் மிக அருமை ..
வாழ்த்துக்களுடன்
விஷ்ணு
நன்றிகள் விஷ்ணு :)
Post a Comment