Wednesday, November 19, 2008

காதல் நிரபராதி...


அந்த கடைசி நாளொன்றில்
என் கண் மை கரைந்தது...நீ
உன் காதலை இடம் பெயர்த்த போது!
மனம் உடைந்தது,
நீ என் புன்னைகையை நிரந்தரமாய்
திருடி சென்றபோது!

வார்த்தைகளால்
எனக்காக நீ கட்டிய
தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்!
உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....

நீ இருட்டறையில் தள்ளிவிட்ட
என் இதயம் இன்னும்
துடிக்கிறது...
விடுதலை வேண்டி
கூண்டுக்குள்
இருக்கும்
சாகாவரம் பெற்ற
நிரபராதி போல..

மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என...

36 comments:

Kumiththa said...

wow. superb kavithai mathu! anupavamo???:P

Mathu said...

Kumiththa: thanks :) and nope, not at all! Anupavam illai.

MSK / Saravana said...

//உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....//

கலக்கல். :)

MSK / Saravana said...

கவிதை அழகா இருக்கு மது.. :)

MSK / Saravana said...

//Kumiththa said...

wow. superb kavithai mathu! anupavamo???:P//

ரிப்பீட்டு.. ;)

ஜியா said...

:(((

//தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்//

Gud one...

kavithai nandru... innum neraya ezutha vaazththukkal :))

Divya said...

\\வார்த்தைகளால்
எனக்காக நீ கட்டிய
தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்!
உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....\\

இந்த வரிகள் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு மது:))


கவிதை அருமை!!!

வாழ்த்துக்கள் மது:))

Divya said...

மது, தொடர் கதை அடுத்த பாகம் எப்போ??

புதியவன் said...

//நீ இருட்டறையில் தள்ளிவிட்ட
என் இதயம் இன்னும்
துடிக்கிறது...
விடுதலை வேண்டி
கூண்டுக்குள் இருக்கும்
சாகாவரம் பெற்ற
நிரபராதி போல..//

கவிதை ரெம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க, வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

//மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என...//

அருமைங்க.

என் இதயமும் காத்திருக்கிறது - நீ வருவாய்யென

ப. அருள்நேசன் said...

"காதல் நிரபராதி"

கண்களை
தண்டனைக்குத் தந்த
கனவு - காதல்

நிரபராதிகளின் தண்டனைக் கைதிதான் காதலோ

வாழ்த்துக்கள் மது
இனிமையான கவிதை

நவீன் ப்ரகாஷ் said...

:))

அழகு மது...

Poornima Saravana kumar said...

கவிதை நல்லா இருக்கு மது..
வாழ்த்துக்கள்..

//மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என...//

வரிகள் அருமை..

gayathri said...

மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என

kavithai varikal nalla iruku

gayathri said...

hai mathu மலரின் மனம்-3 part sekaram podunga pa

Mathu said...

Saravana Kumar MSK said...
//உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....//

கலக்கல். :)

நன்றி சரவணகுமார் :)

Mathu said...

Saravana Kumar MSK said...
கவிதை அழகா இருக்கு மது.. :)

பாராட்டுக்களுக்கு நன்றி :)

Mathu said...

Saravana Kumar MSK said...
//Kumiththa said...

wow. superb kavithai mathu! anupavamo???:P//

ரிப்பீட்டு.. ;)

thanks :) and nope, not at all! Anupavam illai
பதிலும் ரிப்பீட்டு ;)

Mathu said...

ஜி said...
:(((

//தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்//

Gud one...

kavithai nandru... innum neraya ezutha vaazththukkal :))
வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள் :))

Mathu said...

Divya said...
\\வார்த்தைகளால்
எனக்காக நீ கட்டிய
தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்!
உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....\\

இந்த வரிகள் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு மது:))


கவிதை அருமை!!!

வாழ்த்துக்கள் மது:))

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி திவ்யா :))

Mathu said...

Divya said...
மது, தொடர் கதை அடுத்த பாகம் எப்போ??

யோசிக்க கொஞ்சம் டைம் தேவைப்படுது :)இப்போதைக்கு கொஞ்சம் பிஸி.. சீக்கிரம் போடறேன். lol

Mathu said...

புதியவன் said...
//நீ இருட்டறையில் தள்ளிவிட்ட
என் இதயம் இன்னும்
துடிக்கிறது...
விடுதலை வேண்டி
கூண்டுக்குள் இருக்கும்
சாகாவரம் பெற்ற
நிரபராதி போல..//

கவிதை ரெம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க, வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி புதியவன்.

Mathu said...

அதிரை ஜமால் said...
//மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என...//

அருமைங்க.

என் இதயமும் காத்திருக்கிறது - நீ வருவாய்யென

ரொம்ப நன்றி அதிரை ஜமால் :)

Mathu said...

சகாராவின் புன்னகை said...
"காதல் நிரபராதி"

கண்களை
தண்டனைக்குத் தந்த
கனவு - காதல்

நிரபராதிகளின் தண்டனைக் கைதிதான் காதலோ

வாழ்த்துக்கள் மது
இனிமையான கவிதை
உங்கள் வரிகளும் இனிமை :)வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள் :))

Mathu said...

நவீன் ப்ரகாஷ் said...
:))

அழகு மது...
நன்றி:))

Mathu said...

PoornimaSaran said...
கவிதை நல்லா இருக்கு மது..
வாழ்த்துக்கள்..

//மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என...//

வரிகள் அருமை..

வருகைக்கும் தருகைக்கும் நன்றிகள் :))

Mathu said...

gayathri said...
மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என

kavithai varikal nalla iruku
வருகைக்கும் தருகைக்கும் நன்றிகள் gayathi :))

Mathu said...

gayathri said...
hai mathu மலரின் மனம்-3 part sekaram podunga pa

seekiram podaren Gayathri. Sorry for keep u waiting...will do soon. thanks alot :)

தமிழ் தோழி said...

\\வார்த்தைகளால்
எனக்காக நீ கட்டிய
தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்!
உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....\\

இந்த வரிகள் என்னை தாக்கியது. கவிதை மிகவும் அருமை

Mathu said...

தமிழ் தோழி said...
\\வார்த்தைகளால்
எனக்காக நீ கட்டிய
தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்!
உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....\\

இந்த வரிகள் என்னை தாக்கியது. கவிதை மிகவும் அருமை

வருகைக்கும் தருகைக்கும் ரொம்ப நன்றி தமிழ் தோழி :)

நட்புடன் ஜமால் said...

மீண்டும் இன்று படித்தேன்.

என் மனதை பாதித்தன அதே வரிகள்

\\மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என...\\

அநுபவம் இல்லாமலே இப்படியா.

வாழ்த்துக்கள் மது.

- இரவீ - said...

வழக்கு , வாதம் இல்லாத நிரபராதி - நீதியை எதிர்பார்ப்பது - இலவு காத்த கிளியின் பலனுக்காக மட்டும்.

Mathu said...

அதிரை ஜமால் said...
மீண்டும் இன்று படித்தேன்.

என் மனதை பாதித்தன அதே வரிகள்

\\மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என...\\

அநுபவம் இல்லாமலே இப்படியா.

வாழ்த்துக்கள் மது.//


ரொம்ம்ப நன்றி அதிரை :))

Mathu said...

Ravee (இரவீ ) said...
வழக்கு , வாதம் இல்லாத நிரபராதி - நீதியை எதிர்பார்ப்பது - இலவு காத்த கிளியின் பலனுக்காக மட்டும்.

சரியாக சொன்னிங்க இரவீ :) நன்றி :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகு கவிதை

சாகாவரம் பெற்ற
நிரபராதி போல..

அட போட வைக்கும் வரிகள்

Mathu said...

ரொம்ப நன்றிகள் அமிர்தவர்ஷிணி அம்மா :))