Wednesday, December 31, 2008

~இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009~

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் சமாதானமும் மகிழ்ச்சியும் பெருக இந்த ஆண்டு வழிவகுக்கட்டும். வறுமையையும், கண்ணீரையும் துடைத்து மனங்கள் ஒன்றுபட்டு வாழும் ஒரு ஆண்டாக அமைய எனது இனிய வாழ்த்துக்கள் :)

Wednesday, December 24, 2008

இனிய நத்தார் வாழ்த்துக்கள் :)



நாளைய தினம் மலரினும் மணம் மிகுந்து....நிலவினும் ஓளி மிகுந்து...அமைதியின் சுவை கனிந்து....சமாதானமும், சந்தோஷமும் நிரம்பிய நாளாக அமைய எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் :)


Wish you all a very merry Christmas
& may this festive bring peace that fills the whole world :)
Have a wonderful Christmas!

Wednesday, December 03, 2008

காதல் முயற்சி!

காணாத கனவுகளை
மீட்கும் முயற்சியில்
என் காதல்!

***

எழுத்துக்களுக்கு வலிக்கும்
என்று நீ எனக்கு
எழுதாத கவிதைகளை
வாசிக்கும் முயற்சியில்
என் காதல்!

***

எனது பாதங்களுக்கு
சுமை வேண்டாம் என
நீ கொடுக்காத கொலுசுகளின்
சங்கீதத்தை
ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!

***

தேனீக்கள் மொய்க்கும்
என்று நீ பறிக்காமலே
என் குழலில் சூடிய
மலரின் வாசனையை
தேடும் முயற்சியில்
என் காதல்!

***

வீண் செலவு எதற்கு
என்று நீ சேமித்த காதல்
வார்த்தைகளை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!

***

இந்த முயற்சிகளோடு
ஒரு போதும் ஜனனிக்காத
உன் காதலை
தீவிரமாக காதலிக்கும்
முயற்சியில்
என் காதல்!