நான் நிறைய தமிழ் படங்கள் பார்ப்பதுண்டு. ஆனாலும் முன்பு மாதிரி இப்போது அவ்வளவாக படங்கள் பார்ப்பதற்கு முடிவதில்லை, காரணம் படிப்பு. இப்போது ஏன் இதைப்பற்றி எழுதுகிறேன் என்றால்.. தமிழ் படங்களில் பார்க்கும் சில விடயங்களை (குறிப்பாக காதலில் உருகும் காட்சிகளை) சில நாட்களாக நேரில் காணுகின்றேன்.
நான் என்னதான் கவிதை எழுதினாலும், அது கற்பனை மட்டும்தான் என்ற உண்மையை ஏற்றுகொள்பவர்கள் சிலரே (என்னோட மொக்கையான கவிதைகளை வாசிச்ச பிறகாவது தெரிய வேண்டாமா?). குழப்புகிறேனா? சரி, அதை விடுங்கள், எமது தமிழ் சினிமாவில் காதலை சொல்ல முன்பு, காதல் சொல்லும் தருணம், காதல் சொன்ன பின்பு என்று பிரித்து பிரித்து காட்சிகள் வைப்பார்கள்.
அதில் பல படங்களில், பல நடிகர்கள், கண்ணாடி முன் தான் முதலில் காதலை சொல்வார்கள். ஆயிரம் தரம். தற்போதைக்கு ஞாபத்துக்கு வருவது மின்சார கனவில் அர்விந்த் சாமி.
வீட்டு கண்ணாடி, குளியலறை கண்ணாடி என வித விதமான கண்ணாடி முன்பு ஒப்பித்து பார்ப்பார். அதை பார்க்கும் போதெல்லாம், ஐயோ என்ன லூசா இவருக்கு? இப்பிடி ஒத்திகை எல்லாம் பார்த்துக்கொண்டு.....ஒரு ஆணுக்கு அவளவு தைரியம் இல்லையா? இப்பிடியெல்லாம் நிஜத்தில் இருக்கவே இருக்காது...இந்த டைரக்டர்கள் காதில பூ சுத்துறாங்க...என்று தான் நினைப்பேன்.
என்ன ஆச்சரியம்!! அதுதான் உண்மை போல இல்ல, உண்மையேதான்! ஒரு ஹாய் சொல்வதை கூட ஒரு தடவையேனும் எப்படி சொல்லலாம் என்று யோசிக்காமல் சொல்ல மாட்டார்கள் போல இருக்கிறது.
இந்த பதிவுக்கு காரணம் அண்மையில் காதலில் விழுந்த எனது நெருங்கிய தோழிதான். அது என்னத்தை சொல்வது? காதலிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தா...தோழியாக அமைந்து விட்ட காரணத்தால் எனக்கல்லவோ இம்சை..! (ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் !!!!) ;)
என்ன சொல்லட்டும், எப்பிடி சொல்லட்டும், எப்ப சொல்லட்டும்...? எனக்கோ இந்த கேள்விகளுக்கு உண்மையில் எப்படி பதில் சொல்வது என்று புரியவில்லை. I have had a number of crushes but not a love! இந்த காதல் விடயத்தில் அனுபவம் இல்லாத ஆளாய் நான் போய் விட்டது எனது தோழியின் துரதிஷ்டம்.
உண்மை என்ன என்றால், பல தடவைகள் நாங்கள் எல்லோரும் காதல் பற்றி பேசியதுண்டு. அதில் எனக்கு பிடிக்கவேண்டுமென்றால் ஒருவன் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் தொடங்கி பல விடயங்களை எல்லோரும் பகிர்ந்த்ததுண்டு. ஆனால், உண்மையில் எனது தோழி இப்போது ஒன்றும் தெரியாதவள் போல இருக்கிறா. அதாவது, அந்த அதிஷ்டசாலியிடம் எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது என்று பதில் சொல்வது ரொம்ப கஷ்டமாக உள்ளதாம். பட பட என்று உள்ளதாம். Heart beat நிற்பது போல உள்ளதாம். தனக்கு தானே பேசி கொள்கிறாள். தனக்குள் தானே சிரிப்பது வேறு நடக்கிறது! காலையில் அனுப்பும் text ஐ இரவே டைப் பண்ணி draft வைக்கட்டுமோ என்று கேக்கிறாள். ரொம்ப பாவமாக உள்ளது.
பதில் சொல்வதற்கே இவளவு கஷ்டம் என்றால், முதல் முதலில் காதலை சொல்பவர்கள் எவ்வளவு கஷ்டபடுவார்களோ??!??!!! ம்ம்.......மொத்தத்தில் காதல் ஒருவரை பைத்தியமாக்கும் போல தெரிகிறது.
எனக்கு தலை சுற்றுகிறது! :) I love you my friend, and Good luck to you.
இந்த பதிவு விடயம் நமக்குள் மட்டும் ரகசியமாக இருக்கட்டும்...உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்!!! :))
இதுவரையிலான பின்னூட்டங்களின் விளைவாக: ப்ளீஸ் நம்புங்கப்பா....இது என் தோழியை பற்றிய பதிவுதான். என்னை பற்றி அல்ல! எப்பிடி புரிய வைக்கிறது? தோழி யாரென்று சொன்னால் வில்லங்கமாகி விடும் என்ற காரணத்தால் பெயரை குறிப்பிட வில்லை. அவளவுதான்....phew!