Tuesday, July 29, 2008

என்ன எழுத...

என்ன எழுதுவதென்று புரியவில்லை. ஏதாவது கவிதை எழுத நினைத்தால், தற்போது கற்பனை குதிரை Hibernation mood'ல் உள்ளது போலும், கவிதைக்கு தூரமாகவே இருக்கிறது கற்பனை. அதுசரி, blog எழுத வந்த பின்புதானே புரிகிறது கவிதை எழுதுவதென்றால், ஒன்று கவிஞராக இருக்க வேண்டும் அல்லது அனுபவம் வேண்டும் என்று...அதுதான் காதல் அனுபவம். இரண்டும் இல்லாமல் கவிதை எழுத உட்காருவது மடமைத்தனம்! சரி எழுதினால் கவிதைதான் எழுத வேண்டும் என்று என்ன சட்டமா உள்ளது ..கதையில் கவனம் செலுத்துவோம் என முடிவு செய்து எழுதினேன் ஒரு கதை.. பாதியிலேயே stopped! வேறென்ன எழுதலாம்? கட்டுரை போட்டியில் பரிசுகள் வென்ற எனக்கு உண்மைகளை உதாரணங்களுடன் இணைக்க மட்டும்தான் முடிகிறது...இல்லாததை எழுத செலவு கூடுகிறது -நேரத்தை சொன்னேன்.

வேறென்ன செய்யலாம்? எனக்கு பொதுவாக நண்பிகளிடம் தொலைபேசியில் அரட்டை அடிப்பது என்பது பிடிக்காத விடயம்...பிடிக்காது என்பதை விட அவ்வளவாக விரும்பாத/ ரசிக்காத என சொல்லலாம்.
ஆனால் எனக்கு எப்பொழுதுமே சலிக்காத விடயம் ஒன்று உண்டு. நான் என்ன மூடில் இருந்தாலும் பாடல்கள் கேட்பது பிடிக்கும். இப்போது எனது செவிகளில் தேன் தெளித்துகொண்டிருக்கும் பாடல்..''ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா...ஆயிரம் ஆடலும் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா.." வல்லமை தாராயோ'விலிருந்து.
It really has some magic that it pierces into the nerves!
Music என்பது எந்த ஒரு மனிதனையும் உருக வைத்துவிடும்.
Some sort of wonder it is!
நான் உங்களை இன்னுமா போர் அடித்துகொண்டிருக்கிறேன்? இதுவரை வாசித்ததற்கு நன்றி.
அட, நான் ஒரு பதிவு எழுதி விட்டேனே! :)) LOL.

Monday, July 28, 2008

நட்பு காலம்

போகிற இடத்தில்
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற பயம்
நல்ல வேளை
நட்பிற்கு இல்லை

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை

துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும் துளி
என்கிறது
நட்பு

தேர்வு முடித்த
கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம்
வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு
நட்பு முறிவுக்கான சம்மத
உடன்படிக்கை என்று..


--அறிவுமதி

Saturday, July 26, 2008

நிஜம்

ஏனோ எல்லாம் சலிக்கிறதடா
உன் வார்த்தைகள் எல்லாம்
நினைவாக
என் கண்கள் முழுதும்
கனவாக
கண்ணீர் மட்டும் நிஜமாக
காலை மாலை மதியம் எல்லாம்
ஒன்றாய் போக
இனிப்பு புளிப்பு கசப்பு
அனைத்தும்
சுவையற்று போக
உன் நினைவுகள்
அனைத்தும்
வெறும் ரணமாய்
போக
என் வாழ்க்கை மொத்தத்தில் சலிக்கிறதடா ...

Friday, July 25, 2008

ஆயுள் கைதி

தூக்குமேடையில் நான்..
கண்ணெதிரே தூக்கு கயிறு
எல்லா உறவுகளின்
சங்கமத்துடன்...
ஒரு சில புதியவர்களின்
ஆக்கிரமிப்புடன்...
என் கனவுகள்
சுயபுத்தி
சுதந்திரம்
அனைத்தும் எரிக்கப்படுகிறது
ஆம் இன்று எனக்கு
திருமணம்.
நான் ஒரு தூக்கு கயிறு
சுமக்க போகும்
ஆயுள் கைதி..

Wednesday, July 23, 2008

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்...

எனக்கு ஈ-மெயில்இல் வந்த ஒரு நகைச்சுவை! இங்கு பகிரலாம் என்று நினைத்தேன்...நீங்களும் சிரியுங்க :)

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்...

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

Saturday, July 12, 2008

நீயா நானா?

என் கண்களுக்குள் இதுவரை
உன் உருவம்
அடங்கா விட்டாலும்
உனது உதடுகள் வழி
எனது செவிகளுக்குள் ஊடுருவி
இதயத்தில் குடிகொண்ட
உன் வார்த்தைகளை
என்னுள் அடக்கினேன்..



உன் வார்த்தைகளால், நினைவுகளால்
உரம் போட்டு நட்டு வைத்த
அழகான ரோஜா செடி
நாட்கள் செல்ல செல்ல என்
இதயத்தை குத்தி கிழிக்கும்
முட்செடிகளாக மாறியது
உன் தவறில்லை..
செடியின் முட்களை அறியாது,
அதை என் இதயத்தில் நட்டது
என் தவறே!

நீ எல்லாரையும் தான் சிரிக்க
வைக்கிறாய்.. இருந்தாலும்
என்னை ஒருபடி அதிகமாகவே
சிரிக்க வைக்கிறாய் என பூரித்தேன்
ஆனால் அதிகம் சிரித்தால்
அழுவார்கள் என்பார்களே,
அதை புரிய வைக்கவா
இந்த விளையாட்டு?
உன்னை பொறுத்தவரை விளையாட்டு
என்ற சொல் தான் பொருந்தும்.

ஆமாம், நானெங்கே அழுதேன்?
கண்ணீர் என்பது ஆண்களால்
பெண்மைக்கு தரப்படும் சீதனம்..
நான் ஏற்கமாட்டேன் உன் சீதனத்தை!
நான் ஒன்றும்
முதுகெலும்பற்ற ஆணல்ல -கோழையாய்
ஆனால், கௌரவமாய் பிச்சை வாங்க!

இப்பொழுதெல்லாம் நானே
என்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க...
உன் குரலை கேட்காமல் இருக்க...
இது ஒரு காலவரையறை அற்ற பிடிவாதம்...!

Monday, July 07, 2008

உவமைக்காதல்!


நீ காட்டியது அன்பு அல்ல
வெறும் அன்பு மாதிரி என்று
தெரியவில்லை அன்று!
உன் வார்த்தைகள் உண்மை அல்ல
வெறும் உவமை என்று
புரியவில்லை அன்று!


அன்று முதல் அத்தியாயத்திலேயே
முற்றுபுள்ளி வைத்து விட்டாய் நீ
இன்று கடைசி அத்தியாயத்தை
கனவு காணும் வரை நான்


நீ எங்கோ நான் எங்கோ
கவிதையில் மட்டுமல்ல
கடைசி வரை!

Saturday, July 05, 2008

விடியல்



உலகின் அலாரம் அது சேவலின் மொழி
சேவலின் அலாரம் அது கதிரவனின் ஒளி
அவன் பார்வையில் வெட்கி
மறைந்தது இருள், மடிந்தது இரவின் மௌனம்
அதில் மலர்ந்தது ஒரு நாளின் விடியல்

விடியலின் தொடக்கம் விண்வெளியின் செய்தியுடன்
வாழும் மண் அநாதையாய் அழிவை நோக்கி...
கணனியில் கரையும் வாழ்க்கையில்
மனிதன் இன்னொரு இயந்திரமாக மாற...

கருவை கூட தேர்வு செய்யும்
விளைவு அறியா விஞ்ஞான உலகம்...




மீண்டும் சேவலின் மொழி
கதிரவனின் ஒளி
இன்னொரு இரவின் விடியல்
இன்னும் வேகமாக சுழலும்
விந்தையான விஞ்ஞான உலகத்துடன்..

முதல் வணக்கம்

வணக்கம் வலையுலக நண்பர்களே...


என்ன எழுதுவது என்று ஏதும் குறிப்பிட்ட காரணம் இன்றி இந்த Blog தொடங்கி விட்டேன்... கட்டாயம் ஏதாவது எழுத கிடைக்காமலா போய் விடும் என்ற நம்பிக்கையில். விரைவில்ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கிறேன்...