
உன் உருவம்
அடங்கா விட்டாலும்
உனது உதடுகள் வழி
எனது செவிகளுக்குள் ஊடுருவி
இதயத்தில் குடிகொண்ட
உன் வார்த்தைகளை
என்னுள் அடக்கினேன்..
உன் வார்த்தைகளால், நினைவுகளால்
உரம் போட்டு நட்டு வைத்த
அழகான ரோஜா செடி
நாட்கள் செல்ல செல்ல என்
இதயத்தை குத்தி கிழிக்கும்
முட்செடிகளாக மாறியது
உன் தவறில்லை..
செடியின் முட்களை அறியாது,
அதை என் இதயத்தில் நட்டது
என் தவறே!
நீ எல்லாரையும் தான் சிரிக்க
வைக்கிறாய்.. இருந்தாலும்
என்னை ஒருபடி அதிகமாகவே
சிரிக்க வைக்கிறாய் என பூரித்தேன்
ஆனால் அதிகம் சிரித்தால்
அழுவார்கள் என்பார்களே,
அதை புரிய வைக்கவா
இந்த விளையாட்டு?
உன்னை பொறுத்தவரை விளையாட்டு
என்ற சொல் தான் பொருந்தும்.
ஆமாம், நானெங்கே அழுதேன்?
கண்ணீர் என்பது ஆண்களால்
பெண்மைக்கு தரப்படும் சீதனம்..
நான் ஏற்கமாட்டேன் உன் சீதனத்தை!
நான் ஒன்றும்
முதுகெலும்பற்ற ஆணல்ல -கோழையாய்
ஆனால், கௌரவமாய் பிச்சை வாங்க!

என்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க...
உன் குரலை கேட்காமல் இருக்க...
இது ஒரு காலவரையறை அற்ற பிடிவாதம்...!
17 comments:
கவிதை super. எப்பிடி இப்பிடியெல்லாம்? கலக்குங்க மது!
உணர்வுபூர்வமான கவிதை, அருமை!!
\\உனது உதடுகள் வழி
எனது செவிகளுக்குள் ஊடுருவி
இதயத்தில் குடிகொண்ட
உன் வார்த்தைகளை
என்னுள் அடக்கினேன்..\\
சூப்பர்!!
\\செடியின் முட்களை அறியாது,
அதை என் இதயத்தில் நட்டது
என் தவறே! \
உண்மை வரிகள்.....நெஞ்சைத் தொட்டது!!
\\இப்பொழுதெல்லாம் நானே
என்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க...
உன் குரலை கேட்காமல் இருக்க...
இது ஒரு காலவரையறை அற்ற பிடிவாதம்...!\\
பிடிவாதம் பிடி தளருமா???
\\என்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க...
உன் குரலை கேட்காமல் இருக்க...\\
கடினமான ஒரு கட்டுப்பாடு....ஆனால் சில சமயங்களில் அவசியமாகி போகிறது , இல்லியா?
மிகவும் ரசித்தேன் உங்கள் கவிதையை!
குமித்தா
'super' comment க்கு நன்றி :)
திவ்யா
சூப்பர்/அருமை கமெண்ட் க்கு நன்றி :) படித்ததில் பிடித்ததில் சந்தோஷம்.
Divya said...
\\இப்பொழுதெல்லாம் நானே
என்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க...
உன் குரலை கேட்காமல் இருக்க...
இது ஒரு காலவரையறை அற்ற பிடிவாதம்...!\\
பிடிவாதம் பிடி தளருமா???
தளர வாய்ப்புகள் இருப்பதாக அறிகுறி இல்லை :) Just kidding :) அதை அந்த கற்பனை பெண்ணிடம்தான் கேட்க வேண்டும் :))
Divya
\\என்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க...
உன் குரலை கேட்காமல் இருக்க...\\
கடினமான ஒரு கட்டுப்பாடு....ஆனால் சில சமயங்களில் அவசியமாகி போகிறது , இல்லியா?
மிகவும் ரசித்தேன் உங்கள் கவிதையை!
---ஆமாம் திவ்யா :) ரசித்ததில் மகிழ்ச்சி. :)
//செடியின் முட்களை அறியாது,
அதை என் இதயத்தில் நட்டது
என் தவறே!//
கலக்கீட்டீங்க..
:)
//இது ஒரு காலவரையறை அற்ற பிடிவாதம்...!//
நன்றி சரவணகுமார் :))
//இப்பொழுதெல்லாம் நானே
என்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க...
உன் குரலை கேட்காமல் இருக்க...
இது ஒரு காலவரையறை அற்ற பிடிவாதம்...!//
ரொம்ப யதார்த்தமான பிடிவாதம்....
அன்புடன் அருணா
Aruna said...
//இப்பொழுதெல்லாம் நானே
என்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க...
உன் குரலை கேட்காமல் இருக்க...
இது ஒரு காலவரையறை அற்ற பிடிவாதம்...!//
ரொம்ப யதார்த்தமான பிடிவாதம்....
அன்புடன் அருணா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அருணா :)
மீண்டும் வாங்க.
oh my god mathu i love all ur poem. its superb!
madi
Thanks a lot Madi :))
இது ஒரு காலவரையறை அற்ற பிடிவாதம்...! ???
NICE :)...
ஆமாம், நானெங்கே அழுதேன்?
கண்ணீர் என்பது ஆண்களால்
பெண்மைக்கு தரப்படும் சீதனம்..
நான் ஏற்கமாட்டேன் உன் சீதனத்தை!
நான் ஒன்றும்
முதுகெலும்பற்ற ஆணல்ல -கோழையாய்
ஆனால், கௌரவமாய் பிச்சை வாங்க!
இப்பொழுதெல்லாம் நானே
என்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க....
i like this lines. Thank you very much mathu.
Post a Comment