Friday, August 08, 2008

என்ன சொல்ல

எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு வானொலி கேட்பதுண்டு -கேட்க தோன்றினால். அதில் ஒரு நிகழ்ச்சி மிஸ் பண்ணவே மாட்டேன் என்று சொல்லலாம். அதாவது ஒரு கருத்து சொல்லக்கூடிய விஷயத்தை அல்லது ஏதாவது ஒரு நகைச்சுவையான விஷயத்தை கலந்துரையாடுவார்கள். அதில், சில மாதங்களுக்கு முன்பு ஒலி பரப்பான விடயம் இன்னும் என் மனதை விட்டு அகல வில்லை.

இப்போது கூட, அந்த நிகழ்ச்சியின் பெயரை கேட்டால் உடனே நினைவுக்கு வருவது குறிப்பிட்ட அந்த கலந்துரையாடல்! மேலோட்டமாக சொல்ல போனால், சமூகத்தில் ஆண் பெண் சம்பந்த்தபட்ட ஒரு தலைப்பை உரையாடினார்கள். அதில் சரி பிழை என்று சொல்லும் அளவுக்கு எனக்கு வயது, அனுபவம் பத்தாது என்று நினைக்கிறேன்... ஒரு விடயம் தவிர! அதாவது, ஒரு நேயருக்கு பதில் சொல்லும் வகையில் அந்த தொகுப்பாளர் குறிப்பிட்ட விடயம் - எந்த ஒரு பெண்ணும் ஒரு வைத்திய தொழில் புரியும் ஆணை திருமணம் செய்ய விரும்ப மாட்டார் என் என்றால், வைத்திய தொழில் என்னும் போது வீட்டில் செலவிட நேரம் கிடைக்காது!
வைத்திய தொழில் மட்டுமல்ல இது இன்ஜினியரிங் போன்ற தொழில்களில் கூட என்றார்.எனக்கு இதில் புரியாத விடயம் என்ன என்றால், உலகில் இந்த கடமைகளில் ஈடுபடும் ஆண்களோ பெண்களோ இல்லையா? அல்லது அவர்கள் திருமணம் செய்து குடும்பமாக வாழ வில்லையா? என்ன ஒரு நகைச்சுவையான விடயம் அவர் சொன்னது! நினைத்தால் சிரிப்பும் வருகிறது அதே வேளை கோபமும் வருகிறது.
பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்களைத்தான் ஆண்கள் துணையாக ஏற்றுக்கொள்ள யோசிப்பதுண்டு காரணம் அவர்கள் வீட்டில் உள்ள கடமைகளில் இருந்து தவறக்கூடும் என்பது. இது கூட சரி என்று நான் சொல்ல வரவில்லை...ஆனால், மேல் குறிப்பிட்ட தொழில் புரியும் ஆண்களுக்கே இந்த நிலைமை என்றால், அதே பிரிவில் இருக்கும் பெண்களின் நிலைமையை நினைக்க முடியவில்லை -அந்த தொகுப்பாளரின் பார்வையிலிருந்து பார்க்கும் போது. என்ன ஒரு மடமையான எண்ணம்!

அவர் சொன்னது நிகழ்ச்சிக்கு அவசியமானதோ அல்லது அழுத்தி சொல்லப்பட்டதாகவோ இல்லாவிடினும், சொன்ன விடயம் தவறு என்று நினைக்கிறேன். யோசித்து சொன்னாரா, இல்லை வாய்க்கு வந்ததை உளறினாரா, அது தெரியாது...ஆனால், இப்படியான லைவ் நிகழ்ச்சிகளில் கவனமாக கதைப்பது தொகுப்பாளர்களுக்கு இன்றியமையாதது

7 comments:

MSK / Saravana said...

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான சிந்தனை மற்றும் எண்ணங்கள்..
அதன் வெளிப்பாடே இது..

நான் """என்ன சொல்ல"""??

MSK / Saravana said...

TEMPLATE is too nice..

But still you can search for a better one..
:)

Mathu said...

M.Saravana Kumar said...
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருவிதமான சிந்தனை மற்றும் எண்ணங்கள்..
அதன் வெளிப்பாடே இது..

நான் """என்ன சொல்ல"""??

மிக சரி. இப்படி சொல்லி நமது கருத்துக்களை சொல்வது முறை. ஆனால், இதுதான் சரி என மற்றவர்களை வற்புறுத்த கூடாது இல்லையா! தருகைக்கு மிக்க நன்றி :))

Mathu said...

//M.Saravana Kumar said...
TEMPLATE is too nice..

But still you can search for a better one..
:)//

Yeah I am still looking for a better one. Not much time on hands these days. So, pending on the process...:) thanks.

MSK / Saravana said...

http://doxstemplates.com/free/t_free.htm

Try this site..

Mathu said...

Thanks Saravanakumar. :)

Kumiththa said...

நகைச்சுவையாக உரையாடும் நிகழ்ச்சி என்று கூறினீர்கள். அவர் அதை நகைச்சுவையாக கூட சொல்லி இருக்கலாம் தானே. இருந்தாலும் உங்கள் கருத்தின் நியாயமும் புரிகிறது..