Friday, August 08, 2008

இதுவும் காதல்தான்!

அது ஒரு வெள்ளிக்கிழமை. சாலையில் நடந்துகொண்டே யோசிக்கிறேன் நான், "நான் எப்படி அப்பாவிடம் சம்மதம் வாங்குவது. எப்படி எடுத்து சொல்வது. அதெல்லாம் சரிப்பட்டு வராது. உனக்கு ஒன்றும் புரியாது..'இல்லை என்றால் இல்லைதான்' என்று அடித்த மாதிரி சொல்லி விட்டால்? எனது ஆசையில் மண்ணை போட்டு விட்டால்? சுமதியை பேச சொல்லலாமா...அது சரிப்பட்டு -

"ஏய் லூசு...நில்லுடி...யாழினி...நில்லு"
நின்றேன்.
"எங்கே நான் கத்துகிறேன். நீ எங்க யோசனையை வைத்துக்கொண்டு போகிறாய்.."

"ஐயோ சுமதி....உன்னைத்தான் யோசித்தேன். உன்னை விட்டால் வேறு யாரு எனக்கு தோழி.."

சுமதி ஒரு மாதிரியாகவே என்னை பார்த்தாள். "என்ன மேடம், சொல்லுங்க....செய்ய முயற்சி செய்றேன்"

மெதுவாக அவளிடம் அப்பாவை பார்த்து பேசும் படி கேட்டேன். எடுத்தவுடனேயே மறுத்தாள். காலில் விழாத குறையாக கெஞ்சினேன். ஒரு மாதிரியாக ஒப்பு கொண்டாள். சனிக்கிழமை அதாவது நாளை அப்பாவை வந்து சந்திப்பதாக சொல்லி சென்று விட்டாள். பயம் கொஞ்சம் கவலை கொஞ்சம் என்று திக்கு தெரியாமல் சிதறும் சிந்தனைகளோடு வீடு சென்றேன் நான்.

காலை 10 மணி ஆயிற்று. இன்னும் காணவில்லை சுமதியை. வீட்டுக்கு போன் பண்ணினால் கிளம்பிவிட்டாள் என்கிறார்கள். இவள் வராமல் போனால் வாழ்க்கை முழுக்க தனி ஆளாக நிற்கவேண்டும் யாழினி. சுமதி சீக்கிரம் வந்தால் தானே அப்பாவை போய் பார்த்து பேச முடியும். 12 மணிக்கு பின் அனுமதிக்கவும் மாட்டார்கள். என்று யோசித்துக்கொண்டு நின்றவளை வழமைக்கு கொண்டு வந்தது காலிங் பெல் சத்தம். ஓடிப்போய் திறந்தவளுக்கு அதிர்ச்சி. அங்கே சுமதியுடன் அவள் அண்ணன் ஷிவாவும். சிவாவை விரும்பிய காலம் இப்போது வெறும் கனவாக இருந்தது யாழினிக்கு. அப்பாவுக்காக, அவரிடம் கேட்காமலே மறக்க முடிவு செய்த காதல் அவளுடையது. பலமுறை பேசி சிவாவை தன்னை மறக்க சம்மதிக்க வைத்தது பெரிய கதை. அவர்களது காதலுக்கு வயது வெறும் ஒரு மாதம் தான் ஆகியிருந்தது அப்போது. ஆனால், இன்னமும் இருவரும் மறக்கவில்லை. மறந்த மாதிரி காட்டிக்கொண்டார்கள். . .

"யாழினி நான் அப்பாவை வர்ற வழில கண்டு பேசிட்டேன். அவருக்கு இதிலே உடன்பாடு இல்லை. சொன்னா கேட்கவே மாட்டேங்கிறார்."

"என்ன சுமதி, நான் என்ன எனக்காகவா சொல்கிறேன். அவருக்காகதானே. என்னை தனி மனுஷனாக இன்னொரு கல்யாணமும் செய்யாம வளத்தவரு. அதுவும் ஒன்னு ரெண்டு இல்லை, 21 வருஷம்! அவருக்கு நான் இதை கூட செய்ய முடியலைன்னா..நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட்." சொல்லும் போதே கன்னங்களை நனைத்தது கண்களில் இருந்து கொட்டிய அன்பின் அடையாளம்.

இப்போது ஷிவா பேசினான். அவன் பங்குக்கு ஏதாவது கடமைக்கு என்றாலும் சொல்லியாக வேண்டும் என்பது போல...அப்படித்தான் அவளுக்கு தோன்றிற்று.
"யாழினி, அப்பாக்கு வயசு ஆயிடிச்சி. அவர் தன்னோட வாழ்க்கையை விட உன்னோட வா...சாரி உங்களோட வாழ்க்கைதானே முக்கியமா படும்.."

"இப்போ என்ன குறையுது? எனக்கு அவங்க நல்ல வாழ்க்கை தராங்க. நடுத்தர குடும்பந்தான். ஆனா, நாங்க என்ன பெரிய கோடீஸ்வரங்க இல்லையே. அது மட்டும் இல்லாம, அப்பாக்கு இதுவரை காலமும் பொருத்தமான tissue type ஓட யாரோட கிட்னியும் கெடைக்கல. இப்போ அவுங்க பையனோட கிட்னி பொருந்துது. ஆனா, கொடுக்கிறதுக்கு பணம் இல்லை. அதுக்கு பதிலா என்னை மருமகளா அந்த பையனையே கட்டிக்க சொல்றாங்க. இதில என்ன பிழை? நான் என்னிக்கோ கல்யாணம் பண்ணதானே வேணும். திங்கள் ஆப்பரேசன். அன்னிக்கு ஆப்பரேசன் பண்ணலேன்னா ..அ...அ..அப்பாவோட..உயிருக்கு ஆபத்து.."
சொல்லி முடிக்க முன் அழுகை என் பேச்சை தடுத்தது.

என்ன சொல்வதென்று புரியாமல் சுமதி அவளையே பார்க்க, தந்தையின் பாசத்துக்காக தனது காதல், திருமண எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது மனதில் முன்பை விட உயர்ந்தது நிற்கும் தனது காதலியை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல், போகவும் முடியாம திண்டாட்டத்துடன் ஷிவா தடுமாற....
...எதை பற்றியும் கவலை படாமல் ஒரு முடிவு எடுத்தவளாய் "சம்மதம்" என்று மாப்பிளையின் அக்கா கேட்டபடி SMS அனுப்ப கைத்தொலைபேசியை எடுத்தேன் நான்...தந்தையின் அன்புக்கு செலுத்தும் காணிக்கை எதுவென்றாலும் சந்தோஷமாய் ஏற்பேன் என்ற உறுதியோடு.

-முற்றும்-

(கதையை எழுதி முடித்ததும் திருப்பி படிக்கவில்லை நான். பிழைகளை மன்னியுங்கள்)

17 comments:

இவன் said...

கலக்கல் கதை.... சூப்பராக இருக்கிறது...

Divya said...

மது ,
கதை அருமை!!

எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு!!

தொடர்ந்து எழுதுங்க மது,
கவிதை மட்டுமில்ல....கதையும் நல்லாவே எழுதுறீங்க, வாழ்த்துக்கள் மது!

Divya said...

சொல்ல நினைத்த கருத்தை...தெளிவா வெளிப்படுத்தியிருக்கிறீங்க!

\\திங்கள் ஆப்பரேசன். அன்னிக்கு ஆப்பரேசன் பண்ணலேன்னா ..அ...அ..அப்பாவோட..உயிருக்கு ஆபத்து.."
சொல்லி முடிக்க முன் அழுகை என் பேச்சை தடுத்தது.\

மனசு பாரமானது இவ்வரிகளை படிக்கையில்....:(

Divya said...

\\தந்தையின் பாசத்துக்காக தனது காதல், திருமண எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது மனதில் முன்பை விட உயர்ந்தது நிற்கும் தனது காதலியை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல், போகவும் முடியாம திண்டாட்டத்துடன் ஷிவா தடுமாற....\\

சிவாவின் தடுமாற்றம் இயல்பானது....அதிலும் தன் காதலி மனதில் இன்னும் ஒரு படி உயர்ந்து நிற்பதாக நீங்க எழுதியிருப்பது அருமை:))

M.Saravana Kumar said...

ஆஆஆஆ..
டச் பண்ணீட்டீங்க..

ரொம்ப பீலிங்க்ஸா போச்சு..

M.Saravana Kumar said...

இவ்ளோ நல்லா கதை எழுதுவீங்களா??

பெரிய ஆளு தான் நீங்க..

ananth said...

கதை அருமை
தொடர்ந்து எழுதுங்க மது,

Mathu said...

இவன் : நன்றி இவன். மீண்டும் வாங்க! :)

Mathu said...

திவ்யா : உங்கள் பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றி திவ்யா! மகிழ்ச்சி! இருந்தாலும் கவிதை-கதை என கலக்குபவர் நீங்கள்தான்! -என்றும் :))

Mathu said...

சரவணகுமார் : நன்றி! இருந்தாலும் கதை அவ்ளோ நல்லாவா இருக்கு?
பாராட்டுகளுக்கு நன்றி :)

Mathu said...

Ananth: நன்றிகள் ஆனந்த். மீண்டும் வாங்க :)

தமிழன்... said...

நல்லா இருக்கு மது கதை...
நிறைய எழுதுங்க...!

தமிழன்... said...

Divya said...
\\தந்தையின் பாசத்துக்காக தனது காதல், திருமண எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது மனதில் முன்பை விட உயர்ந்தது நிற்கும் தனது காதலியை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல், போகவும் முடியாம திண்டாட்டத்துடன் ஷிவா தடுமாற....\\

சிவாவின் தடுமாற்றம் இயல்பானது....அதிலும் தன் காதலி மனதில் இன்னும் ஒரு படி உயர்ந்து நிற்பதாக நீங்க எழுதியிருப்பது அருமை:))
\\\

ரிப்பீட்டு...

M.Saravana Kumar said...

//இருந்தாலும் கதை அவ்ளோ நல்லாவா
இருக்கு?//

ரொம்ப நல்லா இருக்கு.. :)

Mathu said...

தமிழன் :வருகைக்கு தருகைக்கு மற்றும் பாராட்டுக்கு ரொம்ப நன்றி தமிழன் :) மீண்டும் வாங்க!

Mathu said...

சரவணகுமார் : Ok அப்ப நன்றி again :)

Kumiththa said...

wow...super கதை. எழுதின விதமும் அருமை. தொடர்ந்து நிறைய கதைகள் எழுத எனது வாழ்த்துக்கள்.