காணாத கனவுகளை
மீட்கும் முயற்சியில்
என் காதல்!
***
எழுத்துக்களுக்கு வலிக்கும்
என்று நீ எனக்கு
எழுதாத கவிதைகளை
வாசிக்கும் முயற்சியில்
என் காதல்!
***
எனது பாதங்களுக்கு
சுமை வேண்டாம் என
நீ கொடுக்காத கொலுசுகளின்
சங்கீதத்தை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!
***
தேனீக்கள் மொய்க்கும்
என்று நீ பறிக்காமலே
என் குழலில் சூடிய
மலரின் வாசனையை
தேடும் முயற்சியில்
என் காதல்!
***
வீண் செலவு எதற்கு
என்று நீ சேமித்த காதல்
வார்த்தைகளை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!
***
இந்த முயற்சிகளோடு
ஒரு போதும் ஜனனிக்காத
உன் காதலை
தீவிரமாக காதலிக்கும்
முயற்சியில்
என் காதல்!
41 comments:
wow mathu! கவிதைல கலக்கிறிங்க..பிறகேக்கவே கவிதையோட பிறந்திருப்பிங்க போல...Keep it up!
அருமை
இல்லாத ஒன்றை நினைத்து தவிப்பது காதலுக்கு கவிதைக்கும் இயல்பான ஒன்று தான்
வாழ்த்துக்கள்
//எனது பாதங்களுக்கு
சுமை வேண்டாம் என
நீ கொடுக்காத கொலுசுகளின்
சங்கீதத்தை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!//
இந்த வரிகள் அருமை.
கவிதை ரொம்ப அழகா இருக்கு. வாழ்த்துக்கள் மது.
\\காணாத கனவுகளை
மீட்கும் முயற்சியில்
என் காதல்!\\
நல்ல முயற்சிதான்
\\எழுத்துக்களுக்கு வலிக்கும்
என்று நீ எனக்கு
எழுதாத கவிதைகளை
வாசிக்கும் முயற்சியில்
என் காதல்!\\
வாவ்! அருமை.
\\எனது பாதங்களுக்கு
சுமை வேண்டாம் என
நீ கொடுக்காத கொலுசுகளின்
சங்கீதத்தை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!\\
கொடுக்காத கடிதம்
கொடுக்காத கொலுசு.
ம்ம்ம்... நல்ல முயற்சி.
\\இந்த முயற்சிகளோடு
ஒரு போதும் ஜனனிக்காத
உன் காதலை
தீவிரமாக காதலிக்கும்
முயற்சியில்
என் காதல்!\\
ஃபைனல் டச் சும்மா நச்!
கவிதாயினி மது,
கவிதை அழகா, மென்மையா இன்னும்....
.... மாலை நேர Cup of tea.
(வீண் செலவு எதற்கு
என்று நீ சேமித்த காதல்
வார்த்தைகளை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!) Nice model
காணாத கனவுகளை
எழுத்துக்களுக்கு வலிக்கும்
எனது பாதங்களுக்கு
வீண் செலவு எதற்கு
தேனீக்கள் மொய்க்கும்
நன்றாகவே இருக்கிறது
//இந்த முயற்சிகளோடு
ஒரு போதும் ஜனனிக்காத
உன் காதலை
தீவிரமாக காதலிக்கும்
முயற்சியில்
என் காதல்!
//
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
மது, காதலுக்கு தீவிரமா முயற்சி பண்றீங்க போல.. ;)
செம அழகா இருக்கே.. fantastic. :)
//இந்த முயற்சிகளோடு
ஒரு போதும் ஜனனிக்காத
உன் காதலை
தீவிரமாக காதலிக்கும்
முயற்சியில்
என் காதல்!//
செம செம..
உங்கள் காதல் முயற்சிக்கு all the best madhu.. :)
அழகான காதல் கவிதை.
என் பலைப்பதிவை தொடர்வதற்கு நன்றி.
விஜய்
Mathu...........asathiteenga,
romba nalla irukku kavithai:))
Awesome:))
குமித்தா: அந்த அளவுக்கெல்லாம் இல்லை.. :) நன்றி குமித்தா :)
நசரேயன்: நன்றி நசரேயன் :))
பண்புடன்: மிக்க நன்றி பண்புடன் :)
புதியவன்: மிக்க நன்றி புதியவன் :)
அதிரை ஜமால்: ரொம்ப ரொம்ப நன்றி அதிரை :)
சகாராவின் புன்னகை: ரொம்ப நன்றி :))
சுரேஷ்: ரொம்ப நன்றி :)
Poornima Saran: முயற்சி எதுவும் இல்லை பூர்ணிமா :) இது வெறும் கவிதைதான் :) நன்றி :)
Saravana Kumar MSK said...
மது, காதலுக்கு தீவிரமா முயற்சி பண்றீங்க போல.. ;)//
இல்லவே இல்ல...கவிதைக்குத்தான் முயற்சி பண்ணுறன்..விட மாட்டீங்களே...;) நன்றி :)
விஜய்: ரொம்ப நன்றி விஜய் :))
Divya: Irunthalum ungalai madhiri mudiyuma divya :) Thanks a lot anyway.
கடைசி வரியில் மனதில் ஒரு சின்ன வலி எழும்பச் செய்துவிட்டீர்கள். ஒருதலைக் காதலின் அழகான பரிமாணம்.
Shakthiprabha:வருகைக்கும் தருகைக்கும் மகிழ்ச்சி ஷக்திப்ரபா :) நன்றி!
//Mathu said...
இல்லவே இல்ல...கவிதைக்குத்தான் முயற்சி பண்ணுறன்..விட மாட்டீங்களே...;) //
நம்பிட்டேன்.. ;)
கவிதை அருமை அருமை... வாழ்த்துக்கள்...
Saravana Kumar MSK said...
//Mathu said...
இல்லவே இல்ல...கவிதைக்குத்தான் முயற்சி பண்ணுறன்..விட மாட்டீங்களே...;) //
நம்பிட்டேன்.. ;)
Thanks :)
சிம்பா said...
கவிதை அருமை அருமை... வாழ்த்துக்கள்...
வருகைக்கும் தருகைக்கும் மகிழ்ச்சி சிம்பா :) நன்றி!
கவிதை காதல் மழையாக கொட்டுது. வாழ்த்துக்கள் கவிதைக்கும் காதலுக்கும்!
காரூரன்:
வருகைக்கும் தருகைக்கும் நன்றி :) காதல் வந்தால் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்...இப்போதைக்கு கவிதைக்கு தந்த வாழ்த்தை மட்டும் எடுக்கிறேன்...நன்றி :)
காதல் அனுபவமின்றி கருத்தோட்டமாக
இயற்றப்பட்ட கவிதை எனில் - இந்த மனமுருக்கும் கவிதைக்காக பாராட்டுக்கள்,
சுய அனுபவமெனில் - முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Ravee (இரவீ ): :)) lol.. வருகைக்கும் தருகைக்கும் வாழ்ழ்துக்களுக்கும் மிக்க நன்றி இரவீ :))
காதல் வயப்பட முடியவில்லயே என்ற ஆதங்கம் உங்கள் கவிதைகளில் தெரிகிறது.விரைவில் காதல் வயப்பட என் வாழ்த்துக்கள். கவிதைகள் அருமை.நண்பன் ரமேஷ்
நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்.
ரமேஷ்:
அப்படி ஒரு ஆதங்கமும் இல்லை :)) இது வெறும் கவிதை மட்டும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் :) வருகைக்கும் தருகைக்கும் நன்றி ரமேஷ் :))
வண்ணத்துபூச்சியார்:ரொம்ப நன்றி :) வருகைக்கும் தருகைக்கும் :))
Post a Comment