Friday, February 13, 2009

காதலர் தினம் என்றால்...

காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? நான் உன் மீது என்றும் மாறாத காதல் வைத்திருக்கிறேன் என்று ஒருவருக்கொருவர் ஞாபகப்படுத்துவதற்கா? இல்லை, காதல் என்ற ஒன்றுதான் நம் இருவரையும் இணைக்கிறது என்று கொண்டாடவா? முதலில், காதலர் தினம் காதலர்களால் மட்டுமே கொண்டாடப்படவேண்டிய ஒன்றா?

என்னை பொறுத்தவரை, காதலர் தினம் என்பது, காதலில் நீந்திக்கொண்டிருப்பவர்களை விட, காதலில் நீந்தி கரையேறியவர்கள் அதாவது காதலித்து திருமணம் செய்தவர்கள் காதலிக்கும் போது எப்படி அன்பாக இருந்தார்களோ அதே போல இருவரும் திருமணத்தின் பிற்பாடு வருகின்ற காதலர் தினங்களிலும் அந்த காதல் குறையாமல் அதே போல அன்பாக இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு காதலில் வெற்றி கண்டவர்கள் அதை கொண்டாட வேண்டும். இது காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு மட்டும் என்றில்லை, காதலிக்காமல் கல்யாணம் செய்து அதன் பின் காதலிக்க தொடங்கியவர்களுக்கும் பொருந்தும்.

காதலிக்கும் போது நிறைய விட்டு கொடுப்பீர்கள், சின்ன சின்ன சண்டைகள் இனிக்கும், காதலிக்கும் போது இன்னொருவரிடம் உள்ள நெகடிவ் விஷயங்கள் கண்ணுக்கு தெரியாது தெரிந்தாலும் அது ஒரு மட்டேராகவே இருக்காது...ஆனால் கல்யாணத்திற்கு பின், இவை எல்லாம் தலை கீழாக மாறி; பொசிடிவ் விஷயங்கள் கண்ணில் தெரியாமல் மற்றவரின் நெகடிவ்ஸ் மட்டுமே உங்கள் கண்ணை உறுத்தும், முன்னர் சிறிதும் சலிக்காத நீண்ட உரையாடல்கள் பின்னர் சலிக்கும் ...ஏன் கல்யாணத்தின் பின்னர் இன்னொருவருடைய அழகை புகழகூட மனம் வராது, ஒரு வித ஈகோ வந்து உங்களிடம் குடியிருக்கும்.

இவ்வாறான கல்யாண வாழ்கையில், கணவனும் மனைவியும் ஒன்றாக காதலர் தினத்தை கொண்டாட வேண்டும். உங்கள் ஈகோ, டென்ஷன், வேலை, மற்ற எல்லா பிரச்சனைகளையும் தூர எறிந்துவிட்டு, அந்த ஒரு நாள் பழைய காதலர்களாக மாறி காதலர் தினத்தை கொண்டாடலாம். புது வருடத்தில் புது கொள்கைகளை கடைப்பிடிப்பதை போல, காதலர் தினத்தில் கணவனும் மனைவியும், குடும்பத்தில் இருவரும் என்ன என்ன விடயங்களில் விட்டுகொடுத்து நடக்க வேண்டும் என்று கூட யோசிக்கலாம். காதல் என்பது அன்பு, இதை வெளிப்படுத்த கணவன் மனைவிக்குள் எந்த ஒரு தயக்கமும் தேவை இல்லை. காதல் பயணம் கல்யாணத்தோடு முடிந்துவிட தேவையில்லை. ஆகையால், இந்த காதலர் தினம் முழுமையாக உங்களுக்கும்தான் தம்பதிகளே! அது தவிர, காதலர்களுக்கு இந்த காதலர் தினம் ஒன்றுதான் காதலை வெளிப்படுத்தும் தினம் இல்லை. அதற்க்காக காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்று நான் சொல்ல வரவேயில்லை...என்னை அடிக்க வந்து விடாதீர்கள். காதலர்கள் காதலர்களாக இருப்பதனால் ஒவ்வொரு நாளுமே அவர்களுக்கு காதலர் தினம்தான். ஆனால், காதலர்களை விட, காதலில் வெற்றி பெற்றவர்கள், கல்யாணத்தின் பிறகு பல காரணங்களால் பிஸியாக இருக்கலாம், ஒன்றாக நேரம் செலவிடுவது குறைந்திருக்கலாம்...அதனால் காதலர் தினம் என்பது கல்யாணமானவர்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டாடவே சிறந்தது :)
Have a great day!

24 comments:

அப்துல்மாலிக் said...

காதலர் தினம் என்றால் என்ன?
ஒரு புதுமையான விளக்கம்
நானும் உஙகள் கருத்தை ஆமோதிக்கிறேன்

அப்துல்மாலிக் said...

//என்னை பொறுத்தவரை, காதலர் தினம் என்பது, காதலில் நீந்திக்கொண்டிருப்பவர்களை விட, காதலில் நீந்தி கரையேறியவர்கள் அதாவது காதலித்து திருமணம் செய்தவர்கள் காதலிக்கும் போது எப்படி அன்பாக இருந்தார்களோ அதே போல இருவரும் திருமணத்தின் பிற்பாடு வருகின்ற காதலர் தினங்களிலும் அந்த காதல் குறையாமல் அதே போல அன்பாக இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு காதலில் வெற்றி கண்டவர்கள் அதை கொண்டாட வேண்டும். இது காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு மட்டும் என்றில்லை, காதலிக்காமல் கல்யாணம் செய்து அதன் பின் காதலிக்க தொடங்கியவர்களுக்கும் பொருந்தும். //

என்னுடைய கருத்தும் இதுவே
மனைவியும், கணவரும தத்தமது தாங்கள் காதலை நினைவுகூறுவதற்கு ஒரு சந்தர்ப்பம்

Anonymous said...

புது விளாக்கம்... நல்லாதான் இருக்கு

Anonymous said...

அப்புறம்.... உங்களுக்கும்.. உங்க நண்பிக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

புதியவன் said...

//அந்த ஒரு நாள் பழைய காதலர்களாக மாறி காதலர் தினத்தை கொண்டாடலாம். புது வருடத்தில் புது கொள்கைகளை கடைப்பிடிப்பதை போல, காதலர் தினத்தில் கணவனும் மனைவியும், குடும்பத்தில் இருவரும் என்ன என்ன விடயங்களில் விட்டுகொடுத்து நடக்க வேண்டும் என்று கூட யோசிக்கலாம்.//

அருமையான யோசனை நினைவுல வச்சிக்கிறேன்...

புதியவன் said...

//அதனால் காதலர் தினம் என்பது கல்யாணமானவர்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டாடவே சிறந்தது :)//

இந்தக் கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்...
மது எல்லோரும் காதலர் தினத்தில கவிதை எழுதுவாங்க இல்ல தங்களோட காதல் அனுபவத்த சொல்லுவாங்கா...நீங்க ரொம்ப தெளிவா காதலர் தினத்துக்கு விளக்கம் சொனனது மிக அருமை...

ஆதவா said...

காதலர் தினத்திற்கு நல்ல வரையறை கொடுக்கிறீங்க.. உண்மையிலேயே நீங்க சொல்றாப்டி கல்யாணத்துக்கு அப்பறம் காதல் எப்படிங்கறதுலதான் காதலர் தினத்தோட உண்மையான அர்த்தமே இருக்கு!!!

காதலர் தின வாழ்த்துக்கள்

Vijay said...

ஐ, இதை ஏதாவது மஹாபலிப்ரும் மாதிரியான பாறைகளுள்ள இடத்தில் செதுக்கி வைத்தால் என்றென்றும் அழியாமல் இருக்குமே :-)

நல்ல தத்துவம் :-)

ப. அருள்நேசன் said...

very good mathu,
nice plans which you have got,
But கியன்னக்கொட்ட ஈசி கறணக் கொட்ட அமாறு மது,
ம்ம்

உங்களுக்கும் சக தோழிகள், தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்

- இரவீ - said...

மது,
சூப்பரா யோசிக்கறீங்க... இந்த ஐடியா கூட நல்லா இருக்கே!!!

Anonymous said...

அருமையான விளக்கம் மது!

உண்மைக்காதல் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லீருக்கிறீர்கள்!!!

புல்லட் said...

//காதலிக்கும் போது நிறைய விட்டு கொடுப்பீர்கள், சின்ன சின்ன சண்டைகள் இனிக்கும், காதலிக்கும் போது இன்னொருவரிடம் உள்ள நெகடிவ் விஷயங்கள் கண்ணுக்கு தெரியாது தெரிந்தாலும் அது ஒரு மட்டேராகவே இருக்காது...ஆனால் கல்யாணத்திற்கு பின், இவை எல்லாம் தலை கீழாக மாறி; பொசிடிவ் விஷயங்கள் கண்ணில் தெரியாமல் மற்றவரின் நெகடிவ்ஸ் மட்டுமே உங்கள் கண்ணை உறுத்தும், முன்னர் சிறிதும் சலிக்காத நீண்ட உரையாடல்கள் பின்னர் சலிக்கும் ...ஏன் கல்யாணத்தின் பின்னர் இன்னொருவருடைய அழகை புகழகூட மனம் வராது, ஒரு வித ஈகோ வந்து உங்களிடம் குடியிருக்கும//

வலிக்கும் / பயமுறுத்தும் உண்மைகள்....
சிறப்பான ஆக்கம்...

ஜியா said...

//னால் கல்யாணத்திற்கு பின், இவை எல்லாம் தலை கீழாக மாறி; பொசிடிவ் விஷயங்கள் கண்ணில் தெரியாமல் மற்றவரின் நெகடிவ்ஸ் மட்டுமே உங்கள் கண்ணை உறுத்தும், முன்னர் சிறிதும் சலிக்காத நீண்ட உரையாடல்கள் பின்னர் சலிக்கும் //

அவ்வ்வ்.... ஏன் இப்படி பயமுறுத்துறீங்க?? ;))

நீங்க சொன்னது சரிதான்..

Kumiththa said...

காதலர் தினத்துக்கு அருமையான விளக்கம் மது. நானும் உங்கள் கருத்தை அமோதிக்கிறேன்.

தேவன் மாயம் said...

என்னை பொறுத்தவரை, காதலர் தினம் என்பது, காதலில் நீந்திக்கொண்டிருப்பவர்களை விட, காதலில் நீந்தி கரையேறியவர்கள் அதாவது காதலித்து திருமணம் செய்தவர்கள் காதலிக்கும் போது எப்படி அன்பாக இருந்தார்களோ அதே போல இருவரும் திருமணத்தின் பிற்பாடு வருகின்ற காதலர் தினங்களிலும் அந்த காதல் குறையாமல் அதே போல அன்பாக இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு காதலில் வெற்றி கண்டவர்கள் அதை கொண்டாட வேண்டும். இது காதலித்து கல்யாணம் செய்தவர்களுக்கு மட்டும் என்றில்லை, காதலிக்காமல் கல்யாணம் செய்து அதன் பின் காதலிக்க தொடங்கியவர்களுக்கும் பொருந்தும். //

ரொம்ப தெளிவா இருக்கீங்க! மிகச்சரிதான்

MSK / Saravana said...

கலக்கல் மது.. :)

தமிழ் மதுரம் said...

என்னை பொறுத்தவரை, காதலர் தினம் என்பது, காதலில் நீந்திக்கொண்டிருப்பவர்களை விட, காதலில் நீந்தி கரையேறியவர்கள் அதாவது காதலித்து திருமணம் செய்தவர்கள் காதலிக்கும் போது எப்படி அன்பாக இருந்தார்களோ அதே போல இருவரும் திருமணத்தின் பிற்பாடு வருகின்ற காதலர் தினங்களிலும் அந்த காதல் குறையாமல் அதே போல அன்பாக இருக்கிறார்கள் என உறுதிப்படுத்த வேண்டும்.//

மது என்ன நீங்களும் ஆய்வாளராகிட்டீங்களோ?? நல்ல கருத்துக்கள்??

தமிழ் மதுரம் said...

அது தவிர, காதலர்களுக்கு இந்த காதலர் தினம் ஒன்றுதான் காதலை வெளிப்படுத்தும் தினம் இல்லை. அதற்க்காக காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்று நான் சொல்ல வரவேயில்லை...என்னை அடிக்க வந்து விடாதீர்கள். காதலர்கள் காதலர்களாக இருப்பதனால் ஒவ்வொரு நாளுமே அவர்களுக்கு காதலர் தினம்தான். ஆனால், காதலர்களை விட, காதலில் வெற்றி பெற்றவர்கள், கல்யாணத்தின் பிறகு பல காரணங்களால் பிஸியாக இருக்கலாம், ஒன்றாக நேரம் செலவிடுவது குறைந்திருக்கலாம்...அதனால் காதலர் தினம் என்பது கல்யாணமானவர்கள் காதலை வெளிப்படுத்தி கொண்டாடவே சிறந்தது :)//

நல்ல சிந்தனை??? ஆனால் இன்றைய நவீன உலகில் இதெல்லாம் சரி வருமா??

Divya said...

Nice post Mathu!!


Long time not seen around........busy huh??

- இரவீ - said...

Mathu,
மகளிர்தின வாழ்த்துக்கள்!!!

MSK / Saravana said...

ஆளையே காணோம்.. பிஸி??

Mathu said...

Lakshmi: Sorry I did not publish your comment, mainly because I do not want anyone getting hurt from my blog. Whether or not they are genuine is the second topic. I do not want my space to be a fighting arena. Hope you understand, and I am sorry for what happened if that was true.

Mathu said...

Divya, MSK - thanks a lot for ur kind. Yah I was busy with studies....finding very hard to keep up with blogging. Hope u are well.

Mathu said...

Thanks Ravee :)