உலகின் அலாரம் அது சேவலின் மொழி
சேவலின் அலாரம் அது கதிரவனின் ஒளி
அவன் பார்வையில் வெட்கி
மறைந்தது இருள், மடிந்தது இரவின் மௌனம்
அதில் மலர்ந்தது ஒரு நாளின் விடியல்
விடியலின் தொடக்கம் விண்வெளியின் செய்தியுடன்
வாழும் மண் அநாதையாய் அழிவை நோக்கி...
கணனியில் கரையும் வாழ்க்கையில்
மனிதன் இன்னொரு இயந்திரமாக மாற...
கருவை கூட தேர்வு செய்யும்
விளைவு அறியா விஞ்ஞான உலகம்...
மீண்டும் சேவலின் மொழி
கதிரவனின் ஒளி
இன்னொரு இரவின் விடியல்
இன்னும் வேகமாக சுழலும்
விந்தையான விஞ்ஞான உலகத்துடன்..
8 comments:
அருமை:))
அழகான வரிகள். அருமையான கற்பனை. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
நல்லாருக்கு தொடர்ந்து கலக்குங்க...
நல்ல இருக்கிறது வரிகள்
திவ்யா
நன்றி :)) மீண்டும் வருக!
குமித்தா
நன்றி :))
தமிழன்
நன்றி :)
திகழ்மிளிர்
நன்றி :)) தொடர்ந்து வாங்க.
Post a Comment