Monday, July 28, 2008

நட்பு காலம்

போகிற இடத்தில்
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற பயம்
நல்ல வேளை
நட்பிற்கு இல்லை

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை

துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும் துளி
என்கிறது
நட்பு

தேர்வு முடித்த
கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம்
வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு
நட்பு முறிவுக்கான சம்மத
உடன்படிக்கை என்று..


--அறிவுமதி

18 comments:

MSK / Saravana said...

புத்தகத்தின் பெயர் "நட்பு காலம்" என்று நினைக்கிறேன்..

எழுதியது அறிவுமதி என்று நினைக்கிறேன்.. (but im not sure)

ரொம்ப நாட்களாயிற்று..

அழகாய் இருக்கும் அந்த புத்தகம்.. பச்சை பசேலென்று..

நினைவுபடுத்தியதற்கு நன்றி..

MSK / Saravana said...

ரொம்ப நன்றி மது.. புத்தகத்தை நினைவுபடுத்தியதற்கு..
:)

ச.பிரேம்குமார் said...
This comment has been removed by the author.
ச.பிரேம்குமார் said...

சரவணகுமார் நினைத்தது மிகச்சரி. அண்ணன் அறிவுமதியின் நட்பு காலம் தொகுதியின் கவிதைகள் தான் இவை. கவிதைகளுக்கான சுட்டி கீழே

http://www.keetru.com/literature/poems/arivumathi_9.php

MSK / Saravana said...

ரொம்ப நன்றி பிரேம்..

And thanks for the URL..

Mathu said...

M.Saravana Kumar said...
ரொம்ப நன்றி மது.. புத்தகத்தை நினைவுபடுத்தியதற்கு..
:)

சரவணகுமார், No problem :) தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி!

Mathu said...

பிரேம்குமார்...நன்றி :)

MSK / Saravana said...

http://bloggertricks.com/2008/06/blogger-templates-galore.html

MSK / Saravana said...

If you are in the idea of changing ur template..

http://bloggertricks.com/2008/06/blogger-templates-galore.html

just visit here. i crossed this site today..
:)

Mathu said...

///M.Saravana Kumar said...
If you are in the idea of changing ur template..

http://bloggertricks.com/2008/06/blogger-templates-galore.html

just visit here. i crossed this site today..
:)////

Thanks Saravanakumar. I was actually in the phase of browsing through a number of sites in the past few days to get a better template but couldn't find a comfort one. Thanks again I'll check it out :)

Kumiththa said...

பகிர்வுக்கு நன்றி மது.

Mathu said...

Kumiththa said...
பகிர்வுக்கு நன்றி மது.

தருகைக்கு நன்றி குமித்தா :)

Divya said...

கவிஞர் அறிவுமதியின் அழகான கவிதை தொகுப்பு இது...!!!

\\நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை\\

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!!

ஜியா said...

Engeyo vaasicha maathiriye irukuthennu padichitte vanthen.. kadaisila Arivumathi nu potutteenga :)))

Mathu said...

Divya said...
கவிஞர் அறிவுமதியின் அழகான கவிதை தொகுப்பு இது...!!!

\\நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை\\

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!!

நன்றி திவ்யா :)

Mathu said...

ஜி said...
Engeyo vaasicha maathiriye irukuthennu padichitte vanthen.. kadaisila Arivumathi nu potutteenga :)))

:)) எனக்கும் முதல் தெரியாது. சரவணகுமார், பிரேம்குமார் தந்த தகவலின் பின்புதான் தெரிந்து கொண்டேன் (as above).உங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி :)

கரவைக்குரல் said...

"தேர்வு முடித்த
கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம்
வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு
நட்பு முறிவுக்கான சம்மத
உடன்படிக்கை என்று.."

நிச்சயமாக உண்மை மது,

உண்மை விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கு கின்றீர்கள்
இன்னும் வருவதை எதிபார்க்கின்றேன்
வாழ்த்துக்கள்

Mathu said...

கரவைக்குரல் said...
"தேர்வு முடித்த
கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம்
வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு
நட்பு முறிவுக்கான சம்மத
உடன்படிக்கை என்று.."

நிச்சயமாக உண்மை மது,

உண்மை விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கு கின்றீர்கள்
இன்னும் வருவதை எதிபார்க்கின்றேன்
வாழ்த்துக்கள்

நன்றி கரவைக்குரல். நிச்சயமாக!!
தங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றிகள் :))