Wednesday, December 31, 2008

~இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009~

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் சமாதானமும் மகிழ்ச்சியும் பெருக இந்த ஆண்டு வழிவகுக்கட்டும். வறுமையையும், கண்ணீரையும் துடைத்து மனங்கள் ஒன்றுபட்டு வாழும் ஒரு ஆண்டாக அமைய எனது இனிய வாழ்த்துக்கள் :)

Wednesday, December 24, 2008

இனிய நத்தார் வாழ்த்துக்கள் :)



நாளைய தினம் மலரினும் மணம் மிகுந்து....நிலவினும் ஓளி மிகுந்து...அமைதியின் சுவை கனிந்து....சமாதானமும், சந்தோஷமும் நிரம்பிய நாளாக அமைய எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள் :)


Wish you all a very merry Christmas
& may this festive bring peace that fills the whole world :)
Have a wonderful Christmas!

Wednesday, December 03, 2008

காதல் முயற்சி!

காணாத கனவுகளை
மீட்கும் முயற்சியில்
என் காதல்!

***

எழுத்துக்களுக்கு வலிக்கும்
என்று நீ எனக்கு
எழுதாத கவிதைகளை
வாசிக்கும் முயற்சியில்
என் காதல்!

***

எனது பாதங்களுக்கு
சுமை வேண்டாம் என
நீ கொடுக்காத கொலுசுகளின்
சங்கீதத்தை
ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!

***

தேனீக்கள் மொய்க்கும்
என்று நீ பறிக்காமலே
என் குழலில் சூடிய
மலரின் வாசனையை
தேடும் முயற்சியில்
என் காதல்!

***

வீண் செலவு எதற்கு
என்று நீ சேமித்த காதல்
வார்த்தைகளை ரசிக்கும்
முயற்சியில்
என் காதல்!

***

இந்த முயற்சிகளோடு
ஒரு போதும் ஜனனிக்காத
உன் காதலை
தீவிரமாக காதலிக்கும்
முயற்சியில்
என் காதல்!

Wednesday, November 19, 2008

காதல் நிரபராதி...


அந்த கடைசி நாளொன்றில்
என் கண் மை கரைந்தது...நீ
உன் காதலை இடம் பெயர்த்த போது!
மனம் உடைந்தது,
நீ என் புன்னைகையை நிரந்தரமாய்
திருடி சென்றபோது!

வார்த்தைகளால்
எனக்காக நீ கட்டிய
தாஜ்மஹால்
தற்காலிக விடுமுறையில்!
உன் காலடி சப்தத்தை
எதிர்பார்த்து அதன்
மறு-திறப்பு.....

நீ இருட்டறையில் தள்ளிவிட்ட
என் இதயம் இன்னும்
துடிக்கிறது...
விடுதலை வேண்டி
கூண்டுக்குள்
இருக்கும்
சாகாவரம் பெற்ற
நிரபராதி போல..

மழலையின் கேள்விக்கு
பதில் தெரியாமல்
முழிப்பது போல
தவிக்கிறது என் இதயம்
நீ வருவாயா என...

Monday, November 17, 2008

தமிழ் தத்துவங்கள்

  • நாய்க்கு நாலு கால் இருக்கலாம்...ஆனா அதால லோக்கல் கால்,எஸ் டி டி கால், ஐ எஸ் டி கால்...ஏன் மிஸ்டு கால் கூட பண்ண முடியாது
  • கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்...காவேரி ஆத்துல மீன் புடிக்கலாம்...ஆனா, ஐயர் ஆத்துல மீன் புடிக்க முடியுமோ?
  • திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில்தான் பேச முடியும்.

  • என்னதான் உன் தலை சுற்றினாலும் உன் முதுகை நீ பார்க்க முடியுமா?

  • மீன் புடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம்...நாய் புடிக்கிறவனை நாயவன்னு சொல்ல முடியுமா?

  • என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிகுள்ள போட முடியாது!

  • தேள் கொட்டினா வலிக்கும்...பாம்பு கொட்டினா வலிக்கும்....முடி கொட்டினா வலிக்குமா?
  • ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்....காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.... பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமோ?
  • பொங்கலுக்கு கவன்மெண்ட் லீவு குடுப்பாங்க....ஆனா, இட்லி தோசைக்கு குடுப்பாங்களோ!

  • கோலமாவில் கோலம் போடலாம்...கடலை மாவில் கடலை போட முடியுமா?

  • லைப்ல ஒண்ணுமே இல்லன்னா போர் அடிக்கும்...தலையிலே ஒன்னும் இல்லைன்னா கிளார் அடிக்கும்....
  • ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும்,... பாஸ்ட்புட் கடைல நின்னுக்கிட்டுதான் சாபிடனும்...

Friday, November 07, 2008

மேகலா -ஷக்தி

அப்பப்போ நான் சீரியல்ஸ் பார்ப்பதுண்டு. அதில் மேகலாவும் ஒன்று. மேகலாவில் எப்போதுமே மற்ற சீரியல்கள் மாதிரி அழுகையாக மட்டும் இல்லாமல் நகைச்சுவையையும் கலந்து தருகிறார்கள். அந்த வகையில் இந்த சீரியலை நான் appreciate பண்ணுவதுண்டு.


ஆனால் அதில் வரும் ஷக்தி என்ற பாத்திரம் என்னை உண்மையில் கோவப்பட செய்கிறது. உலகத்தில் இப்படியும் ஒரு பெண் இருக்க முடியுமா. கொஞ்சம் exaggerate பண்ணுகிறார்கள் போல இருக்கிறது. ஷக்தி வரும் சீன்ஸ் என்றாலே முகத்தை திருப்பி வைத்தால் பார்பவர்களுக்கு ஆரோக்கியம். ஒரு பெண் எப்படி இருக்க கூடாது என்பதற்கு ஒரு உதாரணமாக இருக்கலாம் இந்த ஷக்தி கேரக்டர் ஆனாலும் சகிக்க முடியாமல் உள்ளது. ஒரு துரும்பு நல்ல விஷயத்தை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு கேரக்டர். பிழையான விஷயங்களை மட்டும் சரியாக புரிந்து கொள்கிறா. வர வர கரெக்டரை இன்னும் aggressive ஆக மாற்றுகிறார்கள். தாங்க முடிய வில்லை. கொஞ்சம் கூட பொறுமை அடக்கம் இல்லாத பெண். ஒரு விஷயத்தில் கூட விட்டு கொடுக்க யோசிக்காத சுயநலவாதி. உண்மையில் இப்படி ஒருவர் உலகத்தில் இருப்பார்களா? They should not carry on making this character more and more aggressive like this. People who watch it gets fed up with whatever she does all the time. If she can listen to her friend that she should not obey her husband for any reasons, why can she never listen to what her husband or parents say. Its just an impossible character. Well, I haven't come across anyone like this. மிகவும் short tempered ஆன typical மாமியார் கூட இறங்கி போகிறார். ஆனால் இந்த ஷக்தி கேரக்டர் வெறும் சுயநலம் நிறைந்த ஒரு பாத்திரமாகவே உள்ளது.

ps: தொடர்கதை சீக்கிரம் தொடரும் :)

Sunday, October 26, 2008

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

னி தீபாளி வாழ்த்துக்ள்!

நாளை, அனைவருக்கும் ஒரு இனிய நாளாக அமைய எனது வாழ்த்துக்கள்!

Thursday, October 23, 2008

தொடர் பதிவு

தொடர் பதிவில் Tag பண்ணிய சரவணகுமாருக்கு Thanks. அதாவது எனது desktop background ஐ இங்கு பதிய வேண்டும். இந்த Tag எனக்கு ஒரு பதிவாக அமைந்ததில் மகிழ்ச்சி. So, thanks again Saravanan.

இதுதான் எனது desktop. அடிக்கடி மாற்றுவது எல்லாம் இல்லை. எப்போதுமே simple ஆக வைத்திருக்க ஆசை. மற்றபடி, எனது desktop background பற்றி சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை.

இந்த தொடர்பதிவில் நான் எனது blog இற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களையும் அழைக்கிறேன். ஏற்கனவே இதை நீங்கள் செய்யாமல் இருந்தால், please அச்செப்ட் this invitation from me :)

Wednesday, October 22, 2008

அண்மைக்காலமாக blog பக்கமே வர முடிவதில்லை. ஆரம்பத்தில் இருந்த அதே ஆர்வம் இன்னும் இருந்தாலும் விலக முடியா அளவு busy. இப்படி புலம்பி எழுதியவை மட்டுமே என் blog ல் பாதி. :) "பதிவு பக்கமே வாராமல் இருக்கும் மது" என்று வேறு அங்கங்கு சொல்கிறார்கள். உங்கள் பதிவுகளை படிக்க கூட நேரம் கிடைப்பதில்லை...! என்ன செய்ய. இருந்தாலும் என்னை மறக்காமல் இந்த blogging world ல் இருக்கும் இனிய நண்பர்களுக்கு நன்றிகள். You all are very special to me and I hope none is angry at me for not visiting your pages.

PS: Saravanakumar, I will do the tag very soon. Thanks.

Friday, September 19, 2008

ஏதோ நினைவிலே..

என் இதயத்தில்
இளைப்பாறும் உன்
இனிய நினைவுகள்
என்ன நினைத்துக்கொண்டு
இருக்கின்றன?
சீக்கிரமே கிளம்பச்சொல்!
அவை வளர்த்துவிட்ட
கனவுகளை நான் எங்கு
சேமிப்பது...
நீதான் கனவுகளை காதால்
கூட கேட்க மறுக்கிறாயே..
பிறகெப்படி நனவாக்குவாய்?
அதனால் எல்லையற்று
குவியும் உன் நினைவு தரும்
கனவுகளுக்குள் என்னை நான்
தொலைக்கு முன்
உன் நினைவுகளை
தயவு செய்து
வெளியேற சொல்!
இலவசமாக கிடைப்பது
இதயம் என்றால்
கேள்விகளின்றி
குடிவைத்து விடுவாயா..
மன்னித்துவிடு இனியும்
இரங்காதாம் என் இதயம்
..அட இன்னுமா போகவில்லை
...சீக்கிரம்..!!

Friday, September 12, 2008

வணக்கம்!


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மது :) ஒரு சில நாட்களாக யோசிக்கிறேன் ஒரு பதிவு எழுத வேண்டுமென்று...ஆனால் என்ன எழுதுவதென தெரியவில்லை. பயப்பட வேண்டாம், 'என்ன எழுத' என்று இன்னுமொரு தரம் போர் அடிக்க எண்ணமில்லை. Exams க்கு வாழ்த்திய friends க்கு ரொம்ப நன்றிகள். விரைவில் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கிறேன்.

Wednesday, August 20, 2008

The gaps between my posts are about to get longer than usual as my days are so hectic so that I am not even able to reply the comments you leave on my posts. So, friends, please don't mistake me if you don't receive any words from me on your blogs. All because I am lacking of time and this is not going to be so long. And I will recover from this hibernative phase of blogging very soon. Until then, watch this space. And Sorry!!!

Take Care you all :)

Monday, August 18, 2008

பக்கா கணிணிப் பொறியாளர் Vs பக்கா குடும்ப விளக்கு

ஈ-மெயிலில் படித்தது. பகிரலாம் என்று நினைத்தேன் :)

கணவன் - பக்கா கணிணிப் பொறியாளர்
மனைவி: பக்கா குடும்ப விளக்கு
கணவன்: அன்பே, வந்துட்டேன்
மனைவி: சேலைய வாங்கிட்டு வந்தீங்களா?
கணவன்: BAD COMMAND OR FILE NAME.
மனைவி: காலையிலேயே சொல்லியிருந்தேனே?
கணவன்: ABORT,RETRY,IGNORE.
மனைவி: அடக் கடவுளே, மறந்துட்டீங்களா? சரி உங்க சம்பளம் எங்கே?
கணவன்: FILE IN USE, READ ONLY, TRY AFTER SOME TIME.
மனைவி: உங்க கடன் அட்டையைத் தாங்க நான் போய் வாங்கிக்கிறேன்.
கணவன்: SHARING VIOLATION, ACCESS DENIED.
மனைவி: உங்களைக் கட்டிக்கிட்டதே தப்பாப் போச்சி.
கணவன்: DATA TYPE MISMATCH.
மனைவி: உங்களால் ஒரு பிரயோசனமும் இல்ல.
கணவன்: BY DEFAULT.
மனைவி: சரி சரி. ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: HARD DISK FULL.
மனைவி: உங்களைப் பத்தி என்ன தான் நினைச்சிக்கிட்டுருக்கீங்க?
கணவன்: UNKNOWN VIRUS DETECTED.
மனைவி: உங்களுக்கு என்னை விட உங்க கணிணி தான் புடிக்குமா?
கணவன்: TOO MANY PARAMETERS.
மனைவி: நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்.
கணவன்: PROGRAM PERFORMED ILLEGAL OPERATION, IT WILL AUTOMATICALLY CLOSE.
மனைவி: நான் திரும்ப வரவே மாட்டேன்!
கணவன்: CLOSE ALL PROGRAMS & LOG OUT FOR ANOTHER USER.
மனைவி: உங்க கூட பேசுறதே வேஸ்டு.
கணவன்: SHUT DOWN THE COMPUTER.
மனைவி: நான் போறேன்.
கணவன்: ITS NOW SAFE TO TURN OFF YOUR கம்ப்யூட்டர்

:))

Wednesday, August 13, 2008

Serve yourself some peace :)

Just giving my thoughts at this moment a type. Sitting near the window side, a hot cup of coffee with its wavy streams coming off and I love this with the combination of the rain pouring off crazily outside. The tick-tick-tock-tick rhythm the rain plays on my window is a great soothing to my ears!

Don't ask me why I have chosen to write this post in English. I don't even know myself. Started off without realising but now thought to just continue so please be ready to bear my scribbles..lolz..Kidding. Having had a quick scan through all my posts this morning I realised that I am not maintaining my blog under a particular topic..... neither a fixed template!. Well, this proves the fact that I didn't start this blog with a specific aim which was not quite healthy to keep up a blog well. But, oh well, as long as I write "something" non-offensively it should be fine isnt' it! I don't know!

The sky is still open...and the earth is still continuing to absorb those countless drops of water! World is beautiful.. Look out of the window, leaving your sadness, sorrows somewhere behind and see the colourful and happy world out there. There are millions of joys for every sorrow, pick out the best. Erase away your misfortunes. Don't stand there in the mist, walk out and you will see the beautiful world waiting for you! Many little joys that are waiting only for you!

Whoever you are reading this, I wish you have..every happiness that you wish for in your life and may you get many more like this very moment of mine when tranquility is a word of mine/yours!!

ஒரு கேள்வி (?)

இடி இடிக்கும், மின்னல் மின்னும், மேகம் கூட கருக்கும்...ஆனால், மழை மட்டும் பெய்யவே பெய்யாது. அது என்ன?

நான் இப்போது கேட்டு கொண்டு இருக்கும் ரேடியோவில் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தரம் இரண்டு தரம் கேட்டுவிட்டு அத்தோடு விட்டால் பரவாயில்லை. ஆனால், ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை கேட்டு என்னை ரொம்ப யோசிக்க வைக்கிறாங்க. பதில் அனுப்பும் intention ஒன்றும் எனக்கு இல்லை. இருந்தாலும் விடை என்னவாக இருக்கும் என குழம்புகிறேன். இது ஒரு கடி கேள்வியாகவும் இருக்கலாம், விடுகதையாகவும் இருக்கலாம், உங்களுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள் :))

விடை அறிந்தவுடன் (ரேடியோவில் முடிவில் சொல்ல தானே வேணும்) உங்களுக்கு நான் சொல்கிறேன்.

Shoot out your answers buddies!!!

Update:

பதில் : பட்டாசு!

:)

Sunday, August 10, 2008

நினைவின் நேசம்

அடிக்கடி எட்டிப்
பார்க்கும்
மழையை போல
தலையை காட்டுகிறது
உனது ஞாபகங்கள்

*
உரம் போட்டு
வளர்ப்பது
போல
உன் நினைவுகளுக்கு
உயிர் வரும் போதெல்லாம்
உரமாகிறது என்
கண்ணீர்

*
அது எப்படி?
சந்தோஷமான
தருணங்களின் பதிவுகள்
அப்படியே தலைகீழாக
துக்கத்தை
தருகின்றன?

*
யார் எதை கேட்டாலும்
அதை பற்றி எனது
கருத்து என்ன
என்பதை விட
நீ என்ன சொன்னாய்
என்பதுதான்
நினைவுக்கு வருகிர்றது

*
உன்னைவிட உன்
நினைவுகள் என்னை
அதிகமாக நேசிக்கிறன
என
நினைக்கிறேன்
இல்லாவிட்டால்
வெறுத்தாலும்
வேண்டாம் போ என்றாலும்
என்னையே சுற்றி சுற்றி
வருமா...

Friday, August 08, 2008

இதுவும் காதல்தான்!

அது ஒரு வெள்ளிக்கிழமை. சாலையில் நடந்துகொண்டே யோசிக்கிறேன் நான், "நான் எப்படி அப்பாவிடம் சம்மதம் வாங்குவது. எப்படி எடுத்து சொல்வது. அதெல்லாம் சரிப்பட்டு வராது. உனக்கு ஒன்றும் புரியாது..'இல்லை என்றால் இல்லைதான்' என்று அடித்த மாதிரி சொல்லி விட்டால்? எனது ஆசையில் மண்ணை போட்டு விட்டால்? சுமதியை பேச சொல்லலாமா...அது சரிப்பட்டு -

"ஏய் லூசு...நில்லுடி...யாழினி...நில்லு"
நின்றேன்.
"எங்கே நான் கத்துகிறேன். நீ எங்க யோசனையை வைத்துக்கொண்டு போகிறாய்.."

"ஐயோ சுமதி....உன்னைத்தான் யோசித்தேன். உன்னை விட்டால் வேறு யாரு எனக்கு தோழி.."

சுமதி ஒரு மாதிரியாகவே என்னை பார்த்தாள். "என்ன மேடம், சொல்லுங்க....செய்ய முயற்சி செய்றேன்"

மெதுவாக அவளிடம் அப்பாவை பார்த்து பேசும் படி கேட்டேன். எடுத்தவுடனேயே மறுத்தாள். காலில் விழாத குறையாக கெஞ்சினேன். ஒரு மாதிரியாக ஒப்பு கொண்டாள். சனிக்கிழமை அதாவது நாளை அப்பாவை வந்து சந்திப்பதாக சொல்லி சென்று விட்டாள். பயம் கொஞ்சம் கவலை கொஞ்சம் என்று திக்கு தெரியாமல் சிதறும் சிந்தனைகளோடு வீடு சென்றேன் நான்.

காலை 10 மணி ஆயிற்று. இன்னும் காணவில்லை சுமதியை. வீட்டுக்கு போன் பண்ணினால் கிளம்பிவிட்டாள் என்கிறார்கள். இவள் வராமல் போனால் வாழ்க்கை முழுக்க தனி ஆளாக நிற்கவேண்டும் யாழினி. சுமதி சீக்கிரம் வந்தால் தானே அப்பாவை போய் பார்த்து பேச முடியும். 12 மணிக்கு பின் அனுமதிக்கவும் மாட்டார்கள். என்று யோசித்துக்கொண்டு நின்றவளை வழமைக்கு கொண்டு வந்தது காலிங் பெல் சத்தம். ஓடிப்போய் திறந்தவளுக்கு அதிர்ச்சி. அங்கே சுமதியுடன் அவள் அண்ணன் ஷிவாவும். சிவாவை விரும்பிய காலம் இப்போது வெறும் கனவாக இருந்தது யாழினிக்கு. அப்பாவுக்காக, அவரிடம் கேட்காமலே மறக்க முடிவு செய்த காதல் அவளுடையது. பலமுறை பேசி சிவாவை தன்னை மறக்க சம்மதிக்க வைத்தது பெரிய கதை. அவர்களது காதலுக்கு வயது வெறும் ஒரு மாதம் தான் ஆகியிருந்தது அப்போது. ஆனால், இன்னமும் இருவரும் மறக்கவில்லை. மறந்த மாதிரி காட்டிக்கொண்டார்கள். . .

"யாழினி நான் அப்பாவை வர்ற வழில கண்டு பேசிட்டேன். அவருக்கு இதிலே உடன்பாடு இல்லை. சொன்னா கேட்கவே மாட்டேங்கிறார்."

"என்ன சுமதி, நான் என்ன எனக்காகவா சொல்கிறேன். அவருக்காகதானே. என்னை தனி மனுஷனாக இன்னொரு கல்யாணமும் செய்யாம வளத்தவரு. அதுவும் ஒன்னு ரெண்டு இல்லை, 21 வருஷம்! அவருக்கு நான் இதை கூட செய்ய முடியலைன்னா..நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட்." சொல்லும் போதே கன்னங்களை நனைத்தது கண்களில் இருந்து கொட்டிய அன்பின் அடையாளம்.

இப்போது ஷிவா பேசினான். அவன் பங்குக்கு ஏதாவது கடமைக்கு என்றாலும் சொல்லியாக வேண்டும் என்பது போல...அப்படித்தான் அவளுக்கு தோன்றிற்று.
"யாழினி, அப்பாக்கு வயசு ஆயிடிச்சி. அவர் தன்னோட வாழ்க்கையை விட உன்னோட வா...சாரி உங்களோட வாழ்க்கைதானே முக்கியமா படும்.."

"இப்போ என்ன குறையுது? எனக்கு அவங்க நல்ல வாழ்க்கை தராங்க. நடுத்தர குடும்பந்தான். ஆனா, நாங்க என்ன பெரிய கோடீஸ்வரங்க இல்லையே. அது மட்டும் இல்லாம, அப்பாக்கு இதுவரை காலமும் பொருத்தமான tissue type ஓட யாரோட கிட்னியும் கெடைக்கல. இப்போ அவுங்க பையனோட கிட்னி பொருந்துது. ஆனா, கொடுக்கிறதுக்கு பணம் இல்லை. அதுக்கு பதிலா என்னை மருமகளா அந்த பையனையே கட்டிக்க சொல்றாங்க. இதில என்ன பிழை? நான் என்னிக்கோ கல்யாணம் பண்ணதானே வேணும். திங்கள் ஆப்பரேசன். அன்னிக்கு ஆப்பரேசன் பண்ணலேன்னா ..அ...அ..அப்பாவோட..உயிருக்கு ஆபத்து.."
சொல்லி முடிக்க முன் அழுகை என் பேச்சை தடுத்தது.

என்ன சொல்வதென்று புரியாமல் சுமதி அவளையே பார்க்க, தந்தையின் பாசத்துக்காக தனது காதல், திருமண எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது மனதில் முன்பை விட உயர்ந்தது நிற்கும் தனது காதலியை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல், போகவும் முடியாம திண்டாட்டத்துடன் ஷிவா தடுமாற....
...எதை பற்றியும் கவலை படாமல் ஒரு முடிவு எடுத்தவளாய் "சம்மதம்" என்று மாப்பிளையின் அக்கா கேட்டபடி SMS அனுப்ப கைத்தொலைபேசியை எடுத்தேன் நான்...தந்தையின் அன்புக்கு செலுத்தும் காணிக்கை எதுவென்றாலும் சந்தோஷமாய் ஏற்பேன் என்ற உறுதியோடு.

-முற்றும்-

(கதையை எழுதி முடித்ததும் திருப்பி படிக்கவில்லை நான். பிழைகளை மன்னியுங்கள்)

என்ன சொல்ல

எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு வானொலி கேட்பதுண்டு -கேட்க தோன்றினால். அதில் ஒரு நிகழ்ச்சி மிஸ் பண்ணவே மாட்டேன் என்று சொல்லலாம். அதாவது ஒரு கருத்து சொல்லக்கூடிய விஷயத்தை அல்லது ஏதாவது ஒரு நகைச்சுவையான விஷயத்தை கலந்துரையாடுவார்கள். அதில், சில மாதங்களுக்கு முன்பு ஒலி பரப்பான விடயம் இன்னும் என் மனதை விட்டு அகல வில்லை.

இப்போது கூட, அந்த நிகழ்ச்சியின் பெயரை கேட்டால் உடனே நினைவுக்கு வருவது குறிப்பிட்ட அந்த கலந்துரையாடல்! மேலோட்டமாக சொல்ல போனால், சமூகத்தில் ஆண் பெண் சம்பந்த்தபட்ட ஒரு தலைப்பை உரையாடினார்கள். அதில் சரி பிழை என்று சொல்லும் அளவுக்கு எனக்கு வயது, அனுபவம் பத்தாது என்று நினைக்கிறேன்... ஒரு விடயம் தவிர! அதாவது, ஒரு நேயருக்கு பதில் சொல்லும் வகையில் அந்த தொகுப்பாளர் குறிப்பிட்ட விடயம் - எந்த ஒரு பெண்ணும் ஒரு வைத்திய தொழில் புரியும் ஆணை திருமணம் செய்ய விரும்ப மாட்டார் என் என்றால், வைத்திய தொழில் என்னும் போது வீட்டில் செலவிட நேரம் கிடைக்காது!
வைத்திய தொழில் மட்டுமல்ல இது இன்ஜினியரிங் போன்ற தொழில்களில் கூட என்றார்.எனக்கு இதில் புரியாத விடயம் என்ன என்றால், உலகில் இந்த கடமைகளில் ஈடுபடும் ஆண்களோ பெண்களோ இல்லையா? அல்லது அவர்கள் திருமணம் செய்து குடும்பமாக வாழ வில்லையா? என்ன ஒரு நகைச்சுவையான விடயம் அவர் சொன்னது! நினைத்தால் சிரிப்பும் வருகிறது அதே வேளை கோபமும் வருகிறது.
பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்களைத்தான் ஆண்கள் துணையாக ஏற்றுக்கொள்ள யோசிப்பதுண்டு காரணம் அவர்கள் வீட்டில் உள்ள கடமைகளில் இருந்து தவறக்கூடும் என்பது. இது கூட சரி என்று நான் சொல்ல வரவில்லை...ஆனால், மேல் குறிப்பிட்ட தொழில் புரியும் ஆண்களுக்கே இந்த நிலைமை என்றால், அதே பிரிவில் இருக்கும் பெண்களின் நிலைமையை நினைக்க முடியவில்லை -அந்த தொகுப்பாளரின் பார்வையிலிருந்து பார்க்கும் போது. என்ன ஒரு மடமையான எண்ணம்!

அவர் சொன்னது நிகழ்ச்சிக்கு அவசியமானதோ அல்லது அழுத்தி சொல்லப்பட்டதாகவோ இல்லாவிடினும், சொன்ன விடயம் தவறு என்று நினைக்கிறேன். யோசித்து சொன்னாரா, இல்லை வாய்க்கு வந்ததை உளறினாரா, அது தெரியாது...ஆனால், இப்படியான லைவ் நிகழ்ச்சிகளில் கவனமாக கதைப்பது தொகுப்பாளர்களுக்கு இன்றியமையாதது

Friday, August 01, 2008

A for Apple

இன்ப அதிர்ச்சி என்று சொல்லி என்னை இந்த தொடர் விளையாட்டுல மாட்டிவிட்டுட்டாங்க M Saravanakumar. நான் அடிக்கடி விசிட் பண்ணும் தளங்களோட list எழுதணும், அதிலும் என்னோடத எழுத கூடாது அப்பிடி இப்பிடி என்று நான்கு விதிமுறைகள். அதில் நாலாவதுதான் என்னை பொறுத்தவரை கொஞ்சம் சிக்கல். சரி, இதோ என்னோட list.

A:
AOL
B:
BMJ Journal, Blogger அண்மைக்காலமாக! மற்றும் BBC.
C: Cooltoad பாடல்களை download பண்ண. Cineworld ரொம்ப முக்கியம் ;)
E: E-Journals எப்பவாவது தேவைப்படும்...அடிக்கடி செல்வது இல்லை.

F: Facebook :))
G: Google, ofcourse!
H: Hi5 நான் மட்டும் விதிவிலக்கல்ல
I: ICC Love it!!
J: Jane Norman Mostly looking around only;)
M: கவிதைகள் எனப்படும் -M Saravanakumar, MSN
N: National Express செலவு செய்யா தயாராக செல்ல வேண்டிய தளம். Grr!
O: Oosai பாடல்கள் கேட்க
R: Raaga, Rose for you பாடல்கள் கேட்க, download பண்ண
T: T-Mobile
U: Usertube என் நண்பி மூலமாக தெரியும், எப்போதாவது உச்சகட்ட Bore என்றால் செல்வேன். For தமிழ் videos.
W: Waterstones, WHSmith புத்தகங்களுக்காக! விக்கிபீடியா lol :)
Y: Yahoo, Youtube Time passing/consuming!

அப்பாடா! ;)
இனித்தான் கடினமான வேலை! இந்த 4 rules ல் 3 done!

Rules:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People.

உண்மையில் நான் tag பண்ணும் அளவுக்கு blogger friends இன்னும் சேரவில்லை காரணம் நான் blogworld க்கு புதிது. இருந்தாலும் என்னை tag பண்ணிய சரவணகுமாருக்கு நன்றிகள்.
கோவிக்காதிங்க pls!

*I ll definitly tag 3 people once Ive got known enough in this blogworld :) Thanks guys.

Tuesday, July 29, 2008

என்ன எழுத...

என்ன எழுதுவதென்று புரியவில்லை. ஏதாவது கவிதை எழுத நினைத்தால், தற்போது கற்பனை குதிரை Hibernation mood'ல் உள்ளது போலும், கவிதைக்கு தூரமாகவே இருக்கிறது கற்பனை. அதுசரி, blog எழுத வந்த பின்புதானே புரிகிறது கவிதை எழுதுவதென்றால், ஒன்று கவிஞராக இருக்க வேண்டும் அல்லது அனுபவம் வேண்டும் என்று...அதுதான் காதல் அனுபவம். இரண்டும் இல்லாமல் கவிதை எழுத உட்காருவது மடமைத்தனம்! சரி எழுதினால் கவிதைதான் எழுத வேண்டும் என்று என்ன சட்டமா உள்ளது ..கதையில் கவனம் செலுத்துவோம் என முடிவு செய்து எழுதினேன் ஒரு கதை.. பாதியிலேயே stopped! வேறென்ன எழுதலாம்? கட்டுரை போட்டியில் பரிசுகள் வென்ற எனக்கு உண்மைகளை உதாரணங்களுடன் இணைக்க மட்டும்தான் முடிகிறது...இல்லாததை எழுத செலவு கூடுகிறது -நேரத்தை சொன்னேன்.

வேறென்ன செய்யலாம்? எனக்கு பொதுவாக நண்பிகளிடம் தொலைபேசியில் அரட்டை அடிப்பது என்பது பிடிக்காத விடயம்...பிடிக்காது என்பதை விட அவ்வளவாக விரும்பாத/ ரசிக்காத என சொல்லலாம்.
ஆனால் எனக்கு எப்பொழுதுமே சலிக்காத விடயம் ஒன்று உண்டு. நான் என்ன மூடில் இருந்தாலும் பாடல்கள் கேட்பது பிடிக்கும். இப்போது எனது செவிகளில் தேன் தெளித்துகொண்டிருக்கும் பாடல்..''ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம் நானே நானா...ஆயிரம் ஆடலும் ஆடலும் ஆயிரம் பாடலும் நானே நானா.." வல்லமை தாராயோ'விலிருந்து.
It really has some magic that it pierces into the nerves!
Music என்பது எந்த ஒரு மனிதனையும் உருக வைத்துவிடும்.
Some sort of wonder it is!
நான் உங்களை இன்னுமா போர் அடித்துகொண்டிருக்கிறேன்? இதுவரை வாசித்ததற்கு நன்றி.
அட, நான் ஒரு பதிவு எழுதி விட்டேனே! :)) LOL.

Monday, July 28, 2008

நட்பு காலம்

போகிற இடத்தில்
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற பயம்
நல்ல வேளை
நட்பிற்கு இல்லை

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை

துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும் துளி
என்கிறது
நட்பு

தேர்வு முடித்த
கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம்
வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு
நட்பு முறிவுக்கான சம்மத
உடன்படிக்கை என்று..


--அறிவுமதி

Saturday, July 26, 2008

நிஜம்

ஏனோ எல்லாம் சலிக்கிறதடா
உன் வார்த்தைகள் எல்லாம்
நினைவாக
என் கண்கள் முழுதும்
கனவாக
கண்ணீர் மட்டும் நிஜமாக
காலை மாலை மதியம் எல்லாம்
ஒன்றாய் போக
இனிப்பு புளிப்பு கசப்பு
அனைத்தும்
சுவையற்று போக
உன் நினைவுகள்
அனைத்தும்
வெறும் ரணமாய்
போக
என் வாழ்க்கை மொத்தத்தில் சலிக்கிறதடா ...

Friday, July 25, 2008

ஆயுள் கைதி

தூக்குமேடையில் நான்..
கண்ணெதிரே தூக்கு கயிறு
எல்லா உறவுகளின்
சங்கமத்துடன்...
ஒரு சில புதியவர்களின்
ஆக்கிரமிப்புடன்...
என் கனவுகள்
சுயபுத்தி
சுதந்திரம்
அனைத்தும் எரிக்கப்படுகிறது
ஆம் இன்று எனக்கு
திருமணம்.
நான் ஒரு தூக்கு கயிறு
சுமக்க போகும்
ஆயுள் கைதி..

Wednesday, July 23, 2008

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்...

எனக்கு ஈ-மெயில்இல் வந்த ஒரு நகைச்சுவை! இங்கு பகிரலாம் என்று நினைத்தேன்...நீங்களும் சிரியுங்க :)

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்...

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

Saturday, July 12, 2008

நீயா நானா?

என் கண்களுக்குள் இதுவரை
உன் உருவம்
அடங்கா விட்டாலும்
உனது உதடுகள் வழி
எனது செவிகளுக்குள் ஊடுருவி
இதயத்தில் குடிகொண்ட
உன் வார்த்தைகளை
என்னுள் அடக்கினேன்..



உன் வார்த்தைகளால், நினைவுகளால்
உரம் போட்டு நட்டு வைத்த
அழகான ரோஜா செடி
நாட்கள் செல்ல செல்ல என்
இதயத்தை குத்தி கிழிக்கும்
முட்செடிகளாக மாறியது
உன் தவறில்லை..
செடியின் முட்களை அறியாது,
அதை என் இதயத்தில் நட்டது
என் தவறே!

நீ எல்லாரையும் தான் சிரிக்க
வைக்கிறாய்.. இருந்தாலும்
என்னை ஒருபடி அதிகமாகவே
சிரிக்க வைக்கிறாய் என பூரித்தேன்
ஆனால் அதிகம் சிரித்தால்
அழுவார்கள் என்பார்களே,
அதை புரிய வைக்கவா
இந்த விளையாட்டு?
உன்னை பொறுத்தவரை விளையாட்டு
என்ற சொல் தான் பொருந்தும்.

ஆமாம், நானெங்கே அழுதேன்?
கண்ணீர் என்பது ஆண்களால்
பெண்மைக்கு தரப்படும் சீதனம்..
நான் ஏற்கமாட்டேன் உன் சீதனத்தை!
நான் ஒன்றும்
முதுகெலும்பற்ற ஆணல்ல -கோழையாய்
ஆனால், கௌரவமாய் பிச்சை வாங்க!

இப்பொழுதெல்லாம் நானே
என்னை கட்டுப்படுத்தி கொள்கிறேன்
உன்னை நினைக்காமல் இருக்க...
உன் குரலை கேட்காமல் இருக்க...
இது ஒரு காலவரையறை அற்ற பிடிவாதம்...!

Monday, July 07, 2008

உவமைக்காதல்!


நீ காட்டியது அன்பு அல்ல
வெறும் அன்பு மாதிரி என்று
தெரியவில்லை அன்று!
உன் வார்த்தைகள் உண்மை அல்ல
வெறும் உவமை என்று
புரியவில்லை அன்று!


அன்று முதல் அத்தியாயத்திலேயே
முற்றுபுள்ளி வைத்து விட்டாய் நீ
இன்று கடைசி அத்தியாயத்தை
கனவு காணும் வரை நான்


நீ எங்கோ நான் எங்கோ
கவிதையில் மட்டுமல்ல
கடைசி வரை!

Saturday, July 05, 2008

விடியல்



உலகின் அலாரம் அது சேவலின் மொழி
சேவலின் அலாரம் அது கதிரவனின் ஒளி
அவன் பார்வையில் வெட்கி
மறைந்தது இருள், மடிந்தது இரவின் மௌனம்
அதில் மலர்ந்தது ஒரு நாளின் விடியல்

விடியலின் தொடக்கம் விண்வெளியின் செய்தியுடன்
வாழும் மண் அநாதையாய் அழிவை நோக்கி...
கணனியில் கரையும் வாழ்க்கையில்
மனிதன் இன்னொரு இயந்திரமாக மாற...

கருவை கூட தேர்வு செய்யும்
விளைவு அறியா விஞ்ஞான உலகம்...




மீண்டும் சேவலின் மொழி
கதிரவனின் ஒளி
இன்னொரு இரவின் விடியல்
இன்னும் வேகமாக சுழலும்
விந்தையான விஞ்ஞான உலகத்துடன்..

முதல் வணக்கம்

வணக்கம் வலையுலக நண்பர்களே...


என்ன எழுதுவது என்று ஏதும் குறிப்பிட்ட காரணம் இன்றி இந்த Blog தொடங்கி விட்டேன்... கட்டாயம் ஏதாவது எழுத கிடைக்காமலா போய் விடும் என்ற நம்பிக்கையில். விரைவில்ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கிறேன்...